தயாரிப்பாளரின் தைரியம் தான் இந்த ‘அமரம்’
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் நிர்மலா ராஜன்& சி.ஆர்.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திருவருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அமரம்’.
இதில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 28-ல் படம் ரிலீஸ் ஆவதால் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஆக.18- ஆம் தேதி இரவு நடந்தது.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
தயாரிப்பாளர் சி.ஆர் ராஜன்
“எல்லோரும் ஒரு நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைய வேண்டும். அது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகையில் இந்தப் படத்திற்கு அத்தகைய சிறப்பான உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைந்துள்ளது”.
நாயகன் தேஜஸ் ராஜனும் நாயகி ஐரா அகர்வாலும்… வழக்கம் போல டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி சொன்னார்கள். டைரக்டர் தங்களை நன்றாக நடிக்க வைத்ததாக சொன்னார்கள். கஷ்டப்பட்டு படம் எடுத்திருப்பதாக சொன்னார்கள்.
இயக்குநர் திருவருள் கிருஷ்ணன்
“கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் சார் போன்றவர்களைப் பார்த்துதான் சினிமாவுக்குள் வந்தேன். அவர்களைப் போல் படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
நல்ல கதையும் அதற்கு சிறப்பான திரைக்கதையும் இருந்தால் குறைந்த பட்ஜெட்லயே ஒரு பிரம்மாண்டமான படத்த பண்ண முடியும். அதுக்கான பெரிய முயற்சிதான், ஒரு உதாரணம்தான் இந்தப் படம். பிரம்மாண்டமா பண்ணிருக்கோம். அதுக்கு நிறைய திட்டமிடல் தான் காரணம்.
இந்தக் கதை உரிமை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை. இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் தயாரிப்பாளரிடம் இருந்தது”
தொழில் நுட்பக்குழு
இசை – மிக்கி ஜெ .மேயர்
ஒளிப்பதிவு – பரத் குமார்
எடிட்டிங் – ஆர். ஸ்ரீராமர்
கலை இயக்கம் – ஜனார்த்தனன்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – பூபதி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் படத்தை வெளியிடுகிறார்.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.