சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அ.ம.மு.க செயலாளர் தர்ணா!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டம் துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட செயலாளர் பீரங்கி  சுப்ரமணியன் பத்திரப்பதிவு சம்பந்தமாக அலுவலகத்திற்கு சென்றதாக தெரிகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அங்கு உள்ளே சென்றவுடன் இருக்கையில் அமர்ந்திருந்த அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்துவது போல எழுந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள அறைக்கு  சென்று விட்டதாகவும், தான் தாழ்த்தப்பட்டவன் என்ற காரணத்தினால் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பத்திரம் பதிவு செய்வதற்காக மக்கள் நிறைந்த பரபரப்பான சார்பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலுவலக ஊழியர்கள் அல்லாத வெளிநபர்கள் அத்துமீறி அதிகாரிகளின் ஆதரவோடு அரசு முத்திரையை பத்திரத்தில் பதிவு செய்வதும், அலுவலக நேரத்தையும் கடந்து இரவு 12 மணி வரை பத்திரப்பதிவு நடப்பதாகவும் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.