அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மிருகங்கள் தாக்கினால் கூட இவ்வளவு காயங்கள் ஏற்படாது !

திருச்சியில் அடகு நகையை விற்க

தயவு செய்து இந்த பதிவை படிக்க வேண்டாம் இளகிய மனம் உள்ளவர்கள்.

சாத்தான்குளம் ஜெயராஜ்   அவர்களுக்கு   ஏற்பட்டிருந்த காயங்கள்   பற்றி  நீதிமன்றத்தில்  டாக்டர் சொல்லியுள்ள சாட்சியத்தில் பட்டியல் இட்டுள்ளார். போஸ்ட் மார்ட்டம் செய்த போது டாக்டர் பார்த்த காயங்களை பற்றி சொல்லியுள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

காயங்கள் பட்டியல் 

காயம் எண் 1.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

3.5 X 1 செ.மீ அளவுள்ள கருமைநிற சிராய்ப்புக்காயம் முதுகின் இடதுபுறம் கீழ்பகுதியில் காணப்பட்டது. அதை அறுத்துப் பார்த்த போது அதன் கீழுள்ள சதைகளில்  கருமைநிற இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  2.

4 X 1 செ.மீ அளவுள்ள கருமைநிற சிராய்ப்புக்காயம் முதுகின் வலதுபுறம் கீழ்பகுதியில்  காணப்பட்டது. அதை அறுத்துப் பார்த்த போது அதன் கீழுள்ள சதைகளில் கருமைநிற  இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  3.

உயிருடன் இருக்கும் பொழுது உண்டாகும் தோல் உரிதல் சீரற்ற விழிம்புகளுடன் 8 முதல் 15 செ.மீ நீளத்திலும், 5 முதல் 8 செ.மீ அகலத்திலும் இடது பிட்டிப் பகுதியில் காணப்பட்டது. அதை அறுத்துப் பார்த்த போது அதன் கீழுள்ள சதைகளில்  அதிகப்படியான கருமைநிற இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  4.

இறப்பிற்கு முன்பு உண்டாகும் தோல்உரிதல் சீரற்ற விழிம்புகளுடன் 14 முதல் 20 செ.மீ நீளத்திலும், 9 முதல் 17 செ.மீ அகலத்திலும் வலதுபிட்டிப்பகுதியில் காணப்பட்டது. அதை அறுத்துப் பார்த்த போது அதன் கீழுள்ள சதைகளில் அதிகப்படியான கருமைநிற இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  5.

10 X 9 செ.மீ அளவுள்ள கருமைநிற சிராய்ப்புக்காயம் இடது மேல் கையின் பின்புறம்  காணப்பட்டது. அதை அறுத்துப் பார்தத போது அத்ன கீழுள்ள சதைகளில் கருமைநிற  இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  6.

7 X 7 செ.மீ அளவுள்ள கருமைநிற இரத்தக்கட்டு வலது கால் பாதத்தில் காணப்பட்டது.  அதை அறுத்துப் பார்த்த போது அதன் கீழுள்ள சதைகளில் கருமைநிற இரத்தக்கட்டு  காணப்பட்டது.

காயம் எண்  7.

7 X 6.5 செ.மீ அளவுள்ள கருமைநிற இரத்தக்கட்டு வலதுமேல் கையின் உட்புறம்  காணப்பட்டது. அதை அறுத்துப பார்த்த போது அதன் கீழுள்ள சதைகளில் கருமைநிற  இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  8.

மூன்று கருமைநிற கீரல் சிராய்ப்புகள் 2.5 முதல் 3.5 செ.மீ நீளத்தில் வலது மேல் கையின் உட்புறம் காணப்பட்டது.

காயம் எண்  9.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கருமைநிற கீரல் சிராய்ப்பு 4 செ.மீ நீளத்தில் வலது மேல் கையின் கீழ்புறம் உட்பகுதியில் காணப்பட்டது.

காயம் எண்  10.

4.5 X 1.5 செ.மீ அளவுள்ள கருமைநிற சிராய்ப்பு காயம் வலது முழங்கையின் உட்புறம் காணப்பட்டது.

காயம் எண்  11.

1 X 0.5 செ.மீ அளவுள்ள கருமைநிற சிராய்ப்புக் காயம் வலது முழங்காலின் முன்புறம்  காணப்பட்டது.

காயம் எண்  12.

6 X 5 செ.மீ அளவுள்ள கருமைநிற இரத்தக்கட்டு வலது முழங்கையின் பின்புறம்  காணப்பட்டது. அதை அறுத்துப் பார்தத போது அதன் கீழுள்ள சதைகளில் கருமைநிற  இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  13.

4 X 3 செ.மீ அளவுள்ள கருமைநிற இரத்தக்கட்டு வலது கால் பாததத்தில் காணப்பட்டது. அதை அறுத்துப் பார்தத போது அதன் கீழுள்ள சதைகளில் கருமநிற  இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  14.

4 X 3.5 செ.மீ அளவுள்ள கருமைநிற இரத்தக்கட்டு வலது கையில் காணப்பட்டது.  அதை அறுத்துப் பார்தத போது அதன் கீழுள்ள சதைகளில் கருமநிற இரத்தக்கட்டு  காணப்பட்டது.

காயம் எண்  15.

30 X 28 செ.மீ அளவுள்ள கருமைநிற இரத்தக்கட்டு பிட்டிப்பகுதியின் கீழ்பகுதியில்  காணப்பட்டது. அதை அறுத்துப் பார்த்த போது அதன் கீழுள்ள சதைகளில் அதிககப்படியான இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்  16.

26 X 13 செ.மீ அளவுள்ள கருமைநிற இரத்தக்கட்டு வலது தொடையின் பின்புறம்  காணப்பட்டது. அதை அறுத்துப் பார்தத போது அதன் கீழுள்ள சதைகளில் கருமைநிற  இரத்தக்கட்டு காணப்பட்டது.

காயம் எண்   17.

4 X 1 செ.மீ அளவுள்ள கருமைநிற சிராய்ப்புக்காயம் இடதுகாலின் கீழ்பகுதியில்  வெளிப்புறமாக காணப்பட்டது.  மேற்குறிப்பிட்ட காயங்கள் அந்த நபரின் மரணத்திற்கு முன்பு 1 ல் இருந்து 3  நாட்களுக்குள் ஏற்பட்டது போல் காணப்பட்டது என்றும் இறப்பிற்கு பின்பு உண்டான  தோல்உரிதல் 1 X 0.5 செ.மீ அளவில் வலது மேல்கையின் உள்புறத்திலும், 3 X 2 செ.மீ  அளவில் வலதுகால் முட்டியின் வெளிப்புறத்திலும், 3 X 2 செ,மீ அளவில் இடது  மேல்கையின் வெளிப்புறத்தில் காணப்பட்டது

மேற்குறிப்பிட்ட காயங்கள் ஜெயராஜ்   இறப்பதற்கு 1 முதல் 3 நாட்களுக்குள் ஏற்பட்டது போல் காணப்பட்டது என்றும்,   உள்உறுப்புகளில்  இரசாயன பரிசோதனை அறிக்கையில் எந்தவித நச்சுப் பொருட்களும்  கண்டறியப் படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்றும், இந்த அறிக்கைகளை  பெற்ற பின்பு மருத்துவக்குழுவின் இடம் பெற்றிருந்த மருத்துவர்கள் அனைவரும்  கலந்துபேசி இறப்பிற்கான காரணம் குறிப்பிட்டு  இறுதி அறிக்கையினை வழங்கியதாகவும்  அதில் பிரேதபரிசோதனை செய்யப்பட்ட  ஜெயராஜ்  அவருடைய உடம்பில் ஏற்பட்டிருந்த  ஊமைக் காயங்களினால் உண்டான பின் விளைவுகளினால் இறந்திருக்கலாம் என்று  கருத்து கூறியிருந்ததாகவும் கூர்முனையில்லாத ஆயுதங்களால் தாக்கும் பொழுது இந்த காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர் நீதிமன்றத்தில்  சாட்சியம் அளித்துள்ளார்.

பென்னிக்ஸ்  ஜெயராஜ்  உடலைகலை  சடல கூறாய்வு செய்த  போஸ்ட்மார்டம் செய்த டாக்டர்  மருத்துவர் திரு. செல்வமுருகன்   திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் பேராசிரியர்  மற்றும் துறைத்தலைவராக 2019-ம் வருடத்தில் இருந்து பணிபுரிந்து வருபவர்.  சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் M.D., படித்துள்ளதாகவும், சட்டம் சார்ந்த  மருத்துவத்துறையில் 1999-ம் வருடத்தில் இருந்து பணியாற்றி வருவர்,  இவர்   சுமார் 5,000 பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளவர் , வருடத்திற்கு சுமார் 4  அல்லது 5 police custody மற்றும் Judicial custody சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனைகளை  செய்துள்ளார்,

டாக்டர். எ.செல்வமுருகன்  டாக்டர். பிரசன்னா டாக்டர். சுதன் அடங்கிய மருத்துவர் குழுவினர்   கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1 திரு பாரதிதாசன் அவர்கள் முன்னிலையில் போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.

—  வழக்கறிஞர் Dr நல்வினை விஸ்வராஜு .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.