அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பைபிளின் பரமரகசியம் பரலோகம்  !

பைபிள் புதிரா ? புனிமா ? பாகம் - 07

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பரலோகம் (Heaven) என்பது மனித அறிவுக்கு எட்டாத, ஆனால் இறைவனால் தன் பிள்ளைகளுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு மாபெரும் “பரமரகசியம்” ஆகும். இது வெறும் கற்பனை இடமல்ல. அது ஒரு உண்மையான வாஸ்தவமான இடம் என்று வேதம் என்கிற பைபிள்.

இயேசு பரலோகத்தைத் தன் “பிதாவின் வீடு” என்று அழைக்கிறார்.  பரலோகம் எப்படி இருக்கும் என்பதை மனித மனம் முழுமையாகக் கற்பனை செய்ய முடியாது. இயேசு பரலோக இராஜ்ஜியத்தைப் பற்றிப் பேசும்போது, அதை மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷம், விலை உயர்ந்த முத்து போன்ற உவமைகள் மூலம் விளக்கினார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

பரலோகத்தின் நிலவும் நித்திய அமைதி. இனி மரணமுமில்லை. துக்கமுமில்லை. அலறுதலுமில்லை. வருத்தமுமில்லை. அங்கே, சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பிக்கும். தீட்டுள்ளதும் அருவருப்பானதும் அங்கே பிரவேசிப்பதில்லை.

ஒருவன் மனந்திரும்பி, சிறுபிள்ளையைப் போல மாறினால் ஒழியப் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது என்று இயேசு கூறினார். விசுவாசத்தோடு வாழ்பவர்களுக்குப் பரலோகத்தில் அழியாத கிரீடம் , நீதியின் கிரீடம் , ஜீவ கிரீடம், என பலவிதமான கிரீடங்கள் (Crowns) பரிசாகக் காத்திருக்கின்றன.

யாவரும் கேளீர்

பரலோகம் குறித்து அறிவியலில், நாம் வாழும் மூன்று பரிமாணங்களைத் தாண்டி இன்னும் பல மறைவான பரிமாணங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பைபிள் புதிரா ? புனிமா ?குவாண்டம் இயற்பியலின்படி, நம் கண்களுக்குத் தெரியாத, ஆனால் நம்முடனேயே பிணைந்துள்ள மற்றொரு பரிமாணம் அல்லது “நிழல் பிரபஞ்சம்” (Parallel Universe) இருக்க வாய்ப்புள்ளது.

ஒளியை விட வேகமாக விரிவடையும் பிரபஞ்சத்தின் ஒரு எல்லைக்கு மேல் நம்மால் எதையும் பார்க்க முடியாது. இது “காஸ்மிக் ஹொரைசன்” எனப்படுகிறது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இந்த எல்லைக்கு அப்பால் காலம் (Time) என்பது கிடையாது. அது ஒரு நித்தியமான (Eternal) நிலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இது விவிலியப் பரலோகம் குறித்த “காலமற்ற நித்திய வாழ்வு” என்ற கருத்தோடு ஒத்துப்போகிறது.

ஒரு மனிதன் இறக்கும் போது, அவனது உடல் அழிந்தாலும், அவனது உணர்வு அல்லது ஆத்மா குவாண்டம் தகவலாக (Quantum Information) பிரபஞ்சத்தில் தொடர்ந்து இருக்கும் எனச் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பிரகாசமான ஒளி, அமைதி, மற்றும் உடல் கடந்த உணர்வு (Out of Body Experience) போன்றவை உலகெங்கும் உள்ள NDE அனுபவஸ்தர்களிடம் பொதுவாகக் காணப்படுகின்றன.

இது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றமா? அல்லது உண்மையான ஆவிக்குரிய பயணமா என்பது இன்றும் அறிவியலில் ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், பரலோகம் என்பது இந்த மூன்று பரிமாண பிரபஞ்சத்திற்கு அப்பால் உள்ள ஒரு உயர் ஆவிக்குரிய பரிமாணமாக இருக்கலாம் என்பதே நவீன அறிவியல் ரீதியான அனுமானம் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

(தொடரும்)

ஜெ.டி.ஆர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.