இன்று முதல் அமலுக்கு வந்த செல்போன் தடை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என இந்து சமய அறநிலைய துறை அறிவித்திருந்தது. குறிப்பாக கோயில்களின் புனித தன்மையை பேணவும், செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் எடுப்பதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

Cell phone banஅதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக்கூடிய, 108 வைணவ தலங்களில் முதன்மையான தலமாக திகழக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் செல்போன்களை எடுத்து செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. மேலும் செல்போன்களை பாதுகாக்க தெற்கு வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல் உள்ளிட்ட 3 கோபுர வாசல்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 ஆயிரம் பெட்டகங்களில் அதிக பட்சமாக 15 ஆயிரம் செல்போன்கள் வரை வைத்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதைப் போன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் யானை நிறுத்தும் பகுதியில் (மலை அடிவாரத்தில்) செல்போனுக்கு தனி பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Cell phone banமேலும் பக்தர்கள் தங்களது செல் போன்களை வழங்கும் போதும், திரும்ப பெற்று கொள்ளும் போதும் எவ்வித குளறுபடியும் ஏற்படாத வகையில் தனி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போன் வழங்குபவர்களின் முகம் உள்ளிட்ட தனித்துவமான அடையாளங்கள் பதிவு செய்யப்படும். கடந்த 25-ம்தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த சாப்ட்வேர் பரிசோதனை செய்யப்பட்டது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதேபோன்று சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் ஆகிய மூன்று கோவில்களிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு தனிப்பட்ட வசதி மற்றும் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.