அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

26-ல் ‘கான்சிட்டி’ ரிலீஸ்! கான்ஃபிடெண்ட்டில் அர்ஜுன் தாஸ்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

‘பவர்ஹவுஸ் பிக்சர்ஸ்’ பேனரில் ஹரிஷ் துரைராஜ் தயாரித்து டைரக்ட் பண்ணி, வரும் 26-ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகும் படம் ‘கான்சிட்டி’. கதையின் நாயகனாக அர்ஜுன் தாஸ், நாயகியாக அன்னாபென், மற்ற கேரக்டர்களில் யோகிபாபு,  வடிவுக்கரசி, விடிவி கணேஷ், மதன், அருள்தாஸ், லல்லு, சதானந்த், இமான் அண்ணாச்சி, சிறுவன் அகிலன் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ்’ சித்து நாயர், கிளவுட் ஸ்டுடியோஸ்’ பிரஜித் மனோகரன் ஆகியோர் இணைத் தயாரிப்பாளராக பங்கு பெறும் இப்படத்தின் ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங்: அருள் மோசஸ், ஆர்ட் டைரக்டர் : ராஜ்கமல், ஸ்டண்ட் : ‘ஆக்‌ஷன்’ சந்தோஷ், பி.ஆர்.ஓ. :யுவராஜ்.

 26-ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, ‘கான்சிட்டி’யின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.20-ஆம் தேதி மதியம் நடந்தது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

மீடியாக்களைக் கடுப்பாக்கிய வடிவுக்கரசி!  கலகலப்பாகிய விடிவி கணேஷ்!

விழாவில் படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவரும் மிகவும் சுருக்கமாகப் பேசினார்கள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

நடிகர் மதன், “நான் பேச வருவதற்கு முன்பு எனக்கு பில்டப் கொடுத்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அந்த பில்டப்பிற்கு ஒர்த்தானது தான் இப்படம். அப்படியொரு கேரக்டரில் நடிச்சிருக்கேன்”.

நடிகர்கள் லல்லு, சதானந்த் ஆகியோர் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள டைரக்டர் ஹரிஷ் துரைராஜின் கடின உழைப்பை வெகுவாக பாராட்டினார்கள்.

நடிகர் அருள்தாஸ், இமான் அண்ணாச்சி ஆகியோரும் படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் இந்தப் படம் ரிலீக்குப் பிறகு அர்ஜுன் தாஸின் மார்க்கெட் வேல்யூ நிச்சயம் உயரும் என்பதையும் குறிப்பிட்ட்டார்கள்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

கான்சிட்டி உலகத்தை உருவாக்குவதற்காக மிகுந்த உழைப்பைக் கொடுத்து அதிகமான செட்டுகளைப் போட்டுள்ளதாக பேசினார் ஆர்ட் டைரக்டர் ராஜ்கமல்.

“இந்த கேமராமேன் இப்பதான் ஃபுல் பேண்ட் போட்டு வந்திருக்கான். ஷூட்டிங்ல ஸ்விம் ஷூட்ல தான் இருந்தான். ஆனாலும் ரொம்ப ஃபாஸ்டா ஒர்க் பண்ணினான். டைரக்டர் ஹரிஷ் துரை ராஜ், ரொம்பவே பெர்ஃபெக்ட் தான். என்னோட கால்ஷீட்டை ஒருநாள் மிச்சம் பண்ணி அனுப்பிட்டார். அர்ஜுன் தாஸ் ப்ரோ தான் ஹரிஷுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தார்”. இப்படி பல விஷயங்களை தனக்கேயுரிய பாடிலாங்குவேஜுடன் பேசி  அரங்கத்தை கலகலப்பாக்கினார் விடிவி கணேஷ்.

அடுத்துப் பேச வந்த நடிகை வடிவுக்கரசி தான், டைரக்டர் கதை சொல்ல வந்ததை, இவர் அந்த ஆபீசுக்குப் போனதை, அங்கே மாடிப்படி ஏறியதை, இறங்கியதை, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை, இப்படி பல தைகளைச் சொல்லி, முக்கால்மணி நேரம் மணி பேசி, மீடியாக்களை வதைத்து கடுப்பாக்கினார்.

ஹீரோயின் அன்னாபென், “கொட்டுக்காளி’ படத்திற்குப் பிறகு தமிழில் எனக்கு இரண்டாவது படம். அந்தப் படத்தின் மீனா கேரக்டருக்கு நேரெதிரான கேரக்டர் இந்த கான்சிட்டியில். இந்த கமர்ஷியல் கதையில் என்மீது நம்பிக்கை வைத்த ஹரிஷுக்கும் என்னுடன் நடித்த அர்ஜுன் தாஸ் மற்றும் சககலைஞர்களுக்கும் நன்றி”.

அன்னாபென்யோகிபாபு, “சீக்கிரம் டைரக்டராகுப்ப்பான்னு ஹரிஷிடம் பல வருசங்களாக சொல்லிக்கிட்டிருந்தேன். இப்ப அது நடந்திருச்சு. அர்ஜுன் தாஸுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கு. அவரின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு”.

அர்ஜுன் தாஸ், “இந்தப் படத்தை மக்களிடம் அதிகளவில் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முயற்சி மிகப்பெரியது. இந்த கான்சிட்டி குடும்பத்துடன், நண்பர்களுடன் சென்று பார்க்ககூடிய படம். இதில் எமோஷனும் இருக்கு, காமெடியும் இருக்கு. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும், படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை ரொம்பவே இருக்கு”.

ஹரிஷ் துரைராஜ், “இப்படத்தை இணைந்து தயாரிக்க முன்வந்த சித்து நாயர், பிரஜித் மனோகரன், ஆகியோருக்கும் படத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த டெக்னீஷியன்கள், நடிகர்-நடிகைகள் அனைவருக்கும் நன்றி. அண்ணன் அர்ஜுன் தாஸ் இல்லேன்னா இந்தப் படமே இல்லை. அவரது சினிமாப் பயணத்தில் இந்த கான்சிட்டி முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்ற கான்ஃபிடெண்ட் எனக்கும் இருக்கு, அவருக்கும் இருக்கு”.

—  ஆண்டவர்  

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.