நாளும் பெருகும் மோசடி : EOW போலீசின் கட்டமைப்பில் மாற்றம் வருமா?

தமிழகத்தை உலுக்கிய நிதி மோசடிகள் தொடர்பாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அலசுகிறது, இந்த காணொளி தொகுப்பு.

மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து முடக்கி, ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையைப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதில் EOW காவல்துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

இருப்பினும், பணியாளர் பற்றாக்குறை, போதிய வாகன வசதியின்மை, துறைசார் ஒருங்கிணைப்புக் குறைபாடு ஆகியவை விசாரணையின் வேகத்தைப் பாதிக்கிறது. மேலும், மோசடி நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் பிற மாவட்டங்களில் செயல்படுவதையும், ஒரு மோசடி நிகழ்வதற்கு முன்பாகவே அவை தொடர்பான கூட்டங்களை கண்காணித்து தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்துகிறது, இந்த காணொளி.

எம்.எல்.எம். பிசினஸில் சிக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் முகேஷ் மரணம் தற்செயல் விபத்தாகவே முடிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் பேசுகிறது.

இதுபோன்ற பொருளாதாரக் குற்றங்களை திறம்பட கையாள்வதற்கேற்ப மாவட்டங்கள் தோறும் சைபர் கிரைம் நிபுணர்கள், நிதி வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் அடங்கிய குழுக்களுடன் EOW காவல்துறையை நவீனப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கிறது, இந்த காணொளி.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.