தூக்கியடிக்கப்பட்ட டி.எஸ்.பி. பின்னணியில் வின் ஸ்டார் சிவக்குமாரா?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சேலத்தில், வின் ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் சுமார் 300 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியவர் வின் ஸ்டார் சிவக்குமார். தொழிலதிபர் இளங்கோவன் என்பவரிடம் 50 இலட்சத்துக்கு செக் மோசடியில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் 11 மாத சிறை தண்டனையை பெற்றவர். இத்தகைய கிரிமினல் பின்னணி கொண்ட வின் ஸ்டார் சிவக்குமார், சமீபத்தில் த.வெ.க. அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து சால்வை போட்டிருந்தார்.

ஹரிசங்கரி
ஹரிசங்கரி

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த பின்னணியில்தான், இவருக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த சேலம் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. ஹரிசங்கரி அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. ரங்கசாமிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சிவக்குமார்
சிவக்குமார்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மோசடி வழக்கு ஒன்றில் ஒருவரை கைது செய்வதற்காக உடன் சென்றிருந்த காவலர் ராஜா என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். டி.எஸ்.பி. ஹரிசங்கரியின் கணவரும் ஓமலூர் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவருமான சஞ்சீவ்குமாரும், சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

ஒரே நேரத்தில், டி.எஸ்.பி. தம்பதியினரின் அதிரடி இடமாற்றம் போலீசு வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.