அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”முஸ்லிம்கள்னாலே  சாம்பிராணி போடுறவர், கறிக்கடை பாய், துபாய் ஷேக், தீவிரவாதி ” ‘ஹபீபி’ விழாவில் டைரக்டர் அமீர் குமுறல்!

திருச்சியில் அடகு நகையை விற்க

நேசம் எண்டெர்டெய்ன்மெண்ட் & ஜிகேஎஸ் ப்ரோஸ் தயாரித்து மீரா கதிரவன் இயக்கி, வரும் 28-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘ஹபீபி’. தமிழ்நாடெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் ‘ஹபீபி’யில் கதையின் நாயகனாக இயக்குனர்  கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ், உட்பட பலர் நடித்துள்ளனர். இசை : சாம் சி.எஸ். பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.

அடுத்த வாரம் ரிலீசாவதால் ‘ஹபீபி’யின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் மே.17—ஆம் தேதி இரவு நடந்தது. இதில் மீரா கதிரவனின் மீது பேரன்பு கொண்டுள்ள இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராம், அமீர், சேரன், சமுத்திரக்கனி, பாண்டிராஜ், சசி, சுசீந்திரன், வெற்றிமாறன், பா.இரஞ்சித், வி.இசட் துரை, மகிழ்திருமேனி, சுரேஷ் ராஜகுமாரி, ஹரிகரன் ராம், கணேஷ் கே.பாபு, தினகரன் சிவலிங்கம், அவினாஷ், லீனா மணிமேகலை, மலையாள இயக்குனர் ஜகாரியா முகமது, தயாரிப்பாளர் தேனப்பன் என பெரும் நட்சத்திரக் கூட்டமே ‘ஹபீபி’யை வாழ்த்த வந்திருந்தனர்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

அமீர்
அமீர்

இதில் இயக்குனர் அமீரின் பேச்சு தான் செம ஹைலட்…

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

“80 களில் தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள்னாலே சாம்பிராணி போடுறவனா வருவான், இல்லேன்னா கறிக்கடை பாயா வருவான். 90-களில் துபாய் ஷேக்கா வருவான். அவன் வந்தான்னா “நம்பள் தங்கம் தர்றான், நிம்பல் அதுக்கு காசு தர்றான்”னு ஒரு தினுசா தமிழ் பேசுவான். அரபி பேசுறவனுக்கு ஆங்கிலமே தெரியாது. அவன் எப்படி தமிழ் பேசுவான். இதெல்லாம் ஒரு காலத்துல நடந்துச்சு. 2000—க்குப் பிறகு தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே முஸ்லிம்களை தீவிரவாதியா காட்ட ஆரம்பிச்ச கொடுமை ஆரம்பமாச்சு. அது இப்ப வரைக்கும் நடந்துக்கிட்டிருக்கு.

இதைவிட முக்கியமான சங்கதி என்னன்னா, டைரக்டர்  வி.இசட். துரை சமுத்திரக்கனி, மீரா கதிரவன் போன்றவர்கள் தங்களது முஸ்லிம் பெயர்களைக் கூட மாற்றும் சூழல் உள்ளது. நான் சினிமாவுக்கு வந்த புதுசுல ஒரு தயாரிப்பாளர் என்னிடம் உங்க பேரை மாத்திக்கங்க. இல்லேன்னா அதுவே உங்களுக்கு சான்ஸ் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்ணு சொன்னார். பள்ளிக்கூடத்துல சேரும் போது என் பேரை மாத்தல, வேலைல சேர்ந்தப்ப மாத்தல. ஆனா சினிமாவுக்கு மட்டும் மாத்தணும்னா அப்படிப்பட்ட சினிமாவே வேணாம்னு சொல்லிட்டேன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மீரா கதிரவன் & பா.இரஞ்சித்
மீரா கதிரவன் & பா.இரஞ்சித்

இங்கே பேசிய எல்லாருமே முஸ்லிம்களின் வாழ்வியலைப் பேசும் படம்னு சொன்னார்கள். அதிலும் எனக்கு உடன்பாடில்லை. தமிழ்ச் சமூகத்தில் ஒரு பிரிவின் வாழ்வியலை, அந்த சமூகத்தின் பேரன்பை, அந்த சமூகத்தின் காதலை, பெண்களின் உரிமையைத் தான் இந்த ‘ஹபீபி’ பேசியிருக்கு. மாரிசெல்வராஜின் ‘வாழை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்குத் தான் இத்தனை இயக்குனர்கள் வாழ்த்த வந்திருக்கிறார்கள் என்றால் மீரா கதிரவனின் அன்புக்காக மட்டும் தான். எனவே இது முஸ்லில் சமூகத்திற்கான படம் என்பதைத் தாண்டி, இது தமிழ்ச் சமூகத்திற்கான படம்” என குமுறலும் கொந்தளிப்புமாக பேசினார் அமீர்.

கதையின் நாயகன் கஸ்தூரி ராஜா, “மீரா கதிரவனைப் போல ஒரு உழைப்பாளியை, படைப்பாளியைப் பார்த்துவிடலாம். ஆனால் அவரைப் போல மனித நேயரைப் பார்ப்பது அரிது. நான் ஆயிரம் சதவீதம் இந்து என்றாலும் இந்தக் கதை என்னை இஸ்லாமியனாக மாற்றியது.  என் மீது நம்பிக்கை வைத்து இந்த கேரக்டரைக் கொடுத்த மீரா கதிரவனுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்கு திராவிட முகம் என்றார் மீரா கதிரவன்.   மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்”.

கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா

இயக்குனர் ராம், “பச்சைத் தாயத்து கட்டாத, கசாப்புக் கடை வைக்காத, பிரியாணி செய்யாத முஸ்லிம் படம் இது. தமிழில் வெளிவரும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. இந்த ‘ஹபீபி’ வெற்றியடைய துவா செய்கிறேன்”.

மீரா கதிரவன், “எனது உண்மையான பெயரை மாற்றிய போது பல கேள்விகள் எழுந்தன. எனது அம்மாவின் பெயர் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதற்காக கதிரவனைச் சேர்த்துக் கொண்டேன், அவ்வளவு தான். இந்த ஹபீபிக்காக கஸ்தூரி ராஜா சாரை புக் பண்ணியதும் பலரும் என்னிடம் முஸ்லிம்கள்னாலே சிவப்பாகத் தானே இருப்பார்கள்னு சொன்னார்கள். அந்த சிவப்பு பிம்பத்தையும் இதில் உடைத்திருக்கேன். இந்தக் கதையின் முகமது யூசுப் வீடாக காட்டியிருப்பது ஒரு ஐயங்காரின் வீடு தான். மதம், சாதியைக் கடந்து அன்பும் மனிதமும் தான் உயர்ந்தது. இதை தமிழ் சினிமாவில் மட்டும் தான் பேச முடியும். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் படத்தை வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாருக்கும் மிகவும் நன்றி”.

—   ஆண்டவர்  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.