அவனும் அவளும் – தொடர் – 5

0

ஒரு அஞ்சு நிமிஷத்துல என்னைய என்கிட்ட இருந்து திருடி , பிரச்சினை முடிஞ்சது’ன்னு சொல்லிட்டு போறான் . அவனுக்கு மனுசத் தன்மைன்னா என்னன்னே தெரியலை . அவன் பேச்சை போய் நான் கேக்கலாமா ! ….

அவனை எதிர்க்க முடியாம , அவன் பிடியில் அகப்பட்டு , அவன் ஆண்மைக்கு முன்னாடி நான் அமைதியா இருந்த அந்த அஞ்சு நிமிஷம் தான் , நான் என் வாழ்க்கையில செஞ்ச மிகப்பெரிய தப்பு …

https://businesstrichy.com/the-royal-mahal/

அதுவே என்னை குறுகுறுக்க வைக்குதே ! .. அவன் பேச்சை கேட்டு அந்த சிசுவை நான் கலைச்சேன்னா அது என்னைய உசுரோடயே கொன்னுடுமே ! ன்னு ஓ …… ன்னு அலறா சென்பா ! ……

அழுதுக்கிட்டே அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சவ , கண்ணு தண்ணியை தொடைச்சுக்கிட்டு ஒரு பேப்பரை எடுத்து எழுதுறா ! … அது ஒன்னும் தற்கொலை செய்யுறதுக்கு முன்னாடி கடைசியா எழுதுற லெட்டர் எல்லாம் இல்லை …. ‘

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

என்னை ஏமாத்தி என் வவுத்துல புள்ளைய கொடுத்துட்டு போய்ட்டான் . அதுக்கு ஞாயம் வேணும்’னு போலீஸ்கிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்க மூணு பக்கத்துல தனக்குள்ள இருக்க ஆதங்கத்தை கொட்டி எழுதுற கம்ப்ளைண்ட் லெட்டர் ! ….

கம்ப்ளைண்ட் லெட்டரோட கண்ணீர் சிந்திக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் படியேறுறா …. போலீஸ் சென்பாவை சமாதானப்படுத்தி , கௌதமை ஸ்டேஷனுக்கு வரவச்சி பேசுது . பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் எப்.ஐ.ஆர் போடப்படுது . எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள தயாராக இருந்த கௌதம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி முன் ஜாமீன் வாங்குறான் . ”

என்னை ஸ்டேஷன் வரைக்கும் வரவச்சு அசிங்கப்படுத்திட்ட , உன்னை என்ன பண்றேன் பாரு ” ன்னு ஸ்டேஷன் வாசல்லயே சென்பாவை மெரட்டுறான் ….. ” எனக்கு ஞாயம் கிடைக்குதுன்னா நான் கோர்ட் படியேறக் கூட தயங்க மாட்டேன் ” ங்குறா பதிலுக்கு சென்பா ……

இந்த விஷயம் யுனிவர்சிட்டி முழுக்க பரவி கடைசியா கௌதம் காதுக்கும் வருது …. கிண்டலாலும் , அவமானத்தாலும் கௌதம் வெம்பி போறான் . ஒரு பொட்டச்சியால நம்மளோட மரியாதையே போச்சேன்னு உள்ளுக்குள்ள கதறி அழுவுறான் . எப்.ஐ.ஆர் – ஐ வாபஸ் வாங்கச் சொல்லி சென்பாவை எல்லா வகையிலும் கெஞ்சி பாக்குறான் .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

எதுவும் வேலைக்கு ஆகலை …. அப்படி ஒருநாள் நைட் 10.30 மணிக்கு சென்பாவுக்கு போன் செஞ்ச கௌதம் , ” தயவு செஞ்சு குழந்தையை கலைச்சிடு .. கேஸை வாபஸ் வாங்கிடு … இல்லைனா நடக்கறதே வேறன்னு ” மிரட்டுறான் …..

அடுத்தநாள் கௌதம் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கப்பதிடீரென உள்ள நுழைஞ்ச சென்பா , ” என் கூட இருக்குறப்ப உனக்கு இனிச்சது . இப்ப புள்ள உண்டானதும் கசக்குதா … ஒழுங்கு மரியாதையா என் குழந்தைக்கு நீ தான் அப்பன்னு ஒத்துக்கு ” ன்னு காச்மூச்சின்னு கத்திட்டு போறா ! …

இதேபோல ஒருநாள் சாயங்காலம் ஆறு மணி இருக்கும் , வயித்தை தள்ளிக்கிட்டு கௌதம் வீட்டு வாசல் முன்னாடி நின்னுக்கிட்டு , ” கௌதம் வெளிய வர்றியா ! … இல்லையா ! .. நீ வர்ற வரைக்கும் நான் இங்கிருந்து போகப்போறது இல்லை ” ன்னு கதற அந்த தெருவே வேடிக்கை பாக்குது . சென்பாவோட இந்த செய்கையை எல்லாம் பார்த்து கௌதம் மெரண்டு போறான் .

பேசாம சென்பாவையே கல்யாணம் பண்ணிக்கலாம்ங்குற முடிவுக்கு வர்றான் . ” கல்யாணத்துக்கு முன்னாடியே அவ நம்மை குடும்பத்தை ஸ்டேஷன்ல கையைக் கட்டி நிக்க வெச்சிட்டா ” ன்னு கௌதமோட வீட்ல இருக்கவங்க சென்பாவை ஏத்துக்க தயாராக இல்லை …. வயித்துல குழந்தையோட கோர்ட் படியேறுனவளுக்கு , குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா தான் அந்த நீதி கிடைக்குது … “

என் வயித்துல இருக்குற குழந்தைக்கு கௌதம் தான் அப்பன் . டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தா எல்லா தெரிஞ்சிடும் ” னு சென்பா கோர்ட்ல வக்கீலுக்கு மேல வாதாடுறா …. அதுவரைக்கும் எனக்கும் , சென்பா வயித்துல வளர்ற குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்ன கௌதம் , மானத்துக்கும் ; மரியாதைக்கும் ; உண்மைக்கும் பயந்து “ சென்பா வயித்துல இருக்கது என்னோட குழந்தை தான் ” ஒத்துக்கிட்டு பிரச்சினைக்கு ஒரு முடிவைக் கொண்டு வர்றான் .

ரெண்டு பேரோட குடும்பமும் வேற வழியில்லாமலும் , விருப்பமில்லாமலும் கல்யாணத்துக்கு ஒத்துக்க , கைக் குழந்தையோட கண ஜோரா நடந்து முடியுது கல்யாணம் . கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் நடத்தி , பெத்தவங்களை விட்டு ரொம்ப தூரம் விலகி போறாங்க .

அப்பப்ப ரெண்டு பேருக்குள்ள சண்டை வரும் . அது கால்மணி நேரம் கூட தாக்குப் பிடிக்காது . கட்டிப்புடிச்சி ரெண்டு பேரும் சமாதானம் ஆகிடுவாங்க . “ என் குடும்பத்துல உள்ளவங்க கௌரவம் , அது இதுன்னு சொல்லி என் மூளையை மழுங்கடிச்சிட்டாங்க . ஒரு பொண்ணை நான் இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது . ஊருக்கே பாடம் சொல்லிக் கொடுத்த எனக்கு வாழ்க்கைன்னா என்ன ! வாழ்றதுன்னா என்னன்னு ! காட்டிட்ட சென்பா ” ன்னு தன்னோட தவறை உணர்ந்து வருத்தப்படுறான் கௌதம் .

இப்பெல்லாம் ரெண்டு பேரும் ஒரே கார்ல தான் யுனிவர்சிட்டில போய் இறங்குறாங்க . எது சரி , எது தவறுன்னு ரெண்டு பேரும் சுயமா முடிவெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க . வாழ்க்கை சந்தோஷமா போகுது ! …..

-ந.கிருஷ்வின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.