அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வாக்களித்த பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக நின்று, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு  திருச்சி தெற்கு மாவட்ட தி.மு கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராகிய எனக்கும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கும், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அப்துல் சமத் அவர்களுக்கும்  வாக்குகள் அளித்துள்ள  வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தேர்தல் களத்தில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு, பசி, தூக்கம் பாராமல் அயராது உழைத்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் எனது அன்பையும், நன்றியையும் உரித்தாக்குகிறேன்.”

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.