அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சங்குத்தொழிலில் கொடிகட்டிப் பறந்த இராமநாதபுரம் !

இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் !  பாகம் – 10    

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கடந்த தொடரில் இந்திய கடலோரங்களில் நடைபெறும் சங்குத்தொழில் குறித்து பார்த்தோம். இனி, தமிழகத்தில் அதிலும் குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் சங்குத்தொழில் குறித்து அலசுவோம்.

4.6 தமிழகத்தில் சங்கு எடுக்கும் பகுதிகள்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

பலநூற்றாண்டுகளாக மன்னர் ஆட்சி முதற்கொண்டு தற்போது வரை, இந்தியக் கடலோரச் சங்கு எடுக்கும் பகுதிகளை எட்டுப் பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றின் ஆறு பகுதிகள் தற்போதைய தமிழ்நாடு கடலோரங்களிலும், ஒரு பகுதி தென் கேரளக் கடலோரமும், ஒரு பகுதி குஜராத்தைச் சேர்ந்த கட்ச் வளைகுடா பகுதியாகும். அந்தமான் பகுதி இதில் குறிப்பிடவில்லை. கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தென்ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆறுபகுதிகள்.

பொதுவாக இந்திய மற்றும் இலங்கையையும் சேர்த்தால் அதிகமாகக் கிடைக்கக் கூடியது ‘பட்டி’ வகை சார்ந்ததாகும். அதற்குப் பின் மிக அழகான, விலை அதிகம் உள்ள ‘ஜாதி’ என்று அழைக்கும் சங்காகும். இவைகள் பெரும்பாலும் தூத்துக்குடி, கீழக்கரை, இராமேஸ்வரம் பகுதியிலும் ஸ்ரீலங்கா மன்னார் வளைகுடா பகுதியிலும் மற்றும் குஜராத்தில் ‘கட்ச் வளைகுடா’ பகுதியிலும் கிடைக்கின்றன. தூத்துக்குடி, கீழக்கரை மற்றும்இராமேஸ்வரம் பகுதிகளில் கிடைக்கும் சங்குகள் நல்ல வகைகளும், அதிக எடை கொண்டதாகவும், நீளமாகவும் இருக்கும். இவற்றை ஜாதி என்று அழைப்பார்கள். இராமநாதபுரம், தஞ்சாவூர், தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை கடல்களில் கிடைக்கும் சங்குகள் கொஞ்சம் தரம் குறைந்தவை ஆகும். இதனை, ‘பட்டி’ என்று அழைப்பார்கள். இந்தச் சங்குகளில் சிற்சில வித்தியாசங்கள் இருந்தாலும் இங்குக் கிடைக்கும் சங்குகளைப் பொதுவாக ‘பட்டி’ என்றே அழைத்து வந்துள்ளனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், இருமேனியில் சங்கு எடுக்கும் பகுதியில் மட்டும் காலந்தொட்டும், கொஞ்சம் வித்தியாசமான, இரண்டு வகைக்கு இடைப்பட்ட சங்குகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த வகை சங்குகளை ‘இருபிறவி’ சங்குகள் என்றும் அழைத்தும் வந்தனர். இதை Hornel (1914, 1916), Mahadevan and Nayar (1966), Nayar and Mahadevan (1973), Kamal (2015), தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் பேரா.காவ்யா சண்முக சுந்தரம் (Ed.) (2008) போன்றோர்கள் தங்களுடைய ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

4.7 இராமநாதபுரம் பகுதியில் சங்குதொழில்

தமிழகத்தில் சங்குகள் எடுக்கும் பகுதிகளில் இராமநாதபுரம் ஜமீன் பகுதி மிக முக்கியம் வாய்ந்ததாகும். பின் இராமநாதபுரம் சேதுபதி ராஜக்களிடம், ஆங்கிலேயர்களின் வற்புறுத்தலின் பேரில், ஆற்காடு நவாப் ஜமீன்தார் பகுதிகளை ஆங்கிலேயர்களிடம் 1792 ஆம் ஆண்டு ஒப்படைத்தார். பின் 1947 ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபின், எல்லாப் பகுதிகளும் முதலில் ‘Madras Presidency’யுடன் சேர்க்கப்பட்டு, பின் சென்னை மாகாணத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு மாநிலத்தின் பகுதியாகத் தமிழ்நாடு மீன்வளத்துறை பராமரிப்பில் உள்ளது.

ஆரம்பகாலங்களில் சங்கு எடுக்கும்இராமநாபுரம் சமஸ்தானப் பகுதி மன்னார் வளைகுடாவில் கன்னிராஜபுரத்திலிருந்தும் பாம்பன் வரைக்கும் மற்றும் பாக்ஜலசந்தியில் இராமேஸ்வரத்திலிருந்த கரங்காடு வரைக்கும் சேர்ந்து மொத்தம் 190 கி.மீ. வரை இருந்தது. தற்போது எல்லாப் பகுதிகளும் தமிழ்நாடு மீன்வளத்துறை தான் கண்காணித்து வருகின்றனர். மன்னார் வளைகுடாவில் கன்னிராஜபுரத்திலிருந்து, பாம்பன், இராமேஸ்வரம் வரைக்கும் கிடைக்கும் சங்குகள் பெரும்பாலும் var.acuta என்ற ஜாதி வகையைச் சார்ந்தவை. இந்தப் பகுதியில் தான் அதிகமாக விலையுயர்ந்த சங்குகள் கிடைக்கின்றன.

தொடரும் ..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.