அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கலைமகள் சபா பெயரில் மீண்டும் மோசடி ! எச்சரிக்கை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கலைமகள் சபா மோசடி விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அவருக்கு உதவியாக வழக்கறிஞர்கள் எழிலரசி மற்றும் பிரேமலதா ஆகியோர் நியமிக்கப்பட்டு ஆணையத்தின் மேற்பார்வையில் கலைமகள் சபாவின் சொத்துக்கள் பொது ஏலத்தில் விற்று காசாக்கி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுக்கும் நோக்கில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலைமகள் சபா பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்; அவர்களை பற்றிய தகவல் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலரும் பதிவுத்துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.

”போலியான ஆவணங்கள் மூலம் சட்டப்பூர்வமான பரிவர்த்தனையாக காட்டி பொதுமக்களை ஆசைகாட்டி மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாந்துவிடாதீர்கள். இதுபோன்ற மோசடியாக பெறப்படும் ரசீதுகள் கலைமகள் சபாவினை கட்டுப்படுத்தாது” அறிவித்திருக்கிறார்.

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இதுபோன்ற மோசடி கும்பலிடம் ஏமாந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன், சிறப்பு அலுவலர், கலைமகள் சபா, எண்:17/48, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை – 6000017 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

முழுமையான வீடியோவை காண 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.