அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அன்பில் மகேஸ்க்கு ஆதரவாக லியோனி பிரச்சாரம்…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருவெறும்பூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதிக்குட்பட்ட செந்தனீர்புரம், பொன்மலைப்பட்டி, பொன்மலை பகுதி கழகத்தைச் சார்ந்த மிலிட்டரி காலனி, அம்பிகாபுரம், அரியமங்கலம், எஸ்ஐடி காமராஜர் நகர். பாரதிதாசன் நகர் ஆகிய பகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து ஐ.லியோனி அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் திறந்த வேனில் நின்றபடி, தனது வழக்கமான நகைச்சுவை கலந்த பாணியில் பாடல்களைப் பாடி லியோனி பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

புகைப்படத்தை காட்டி விமர்சனம்:

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பிரச்சாரத்தின் போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த லியோனி, உதயநிதி ஸ்டாலின் கையாண்ட பாணியைப் பின்பற்றி புகைப்படங்களைச் சான்றாகக் காட்டிப் பேசினார்.

“சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் இப்போது பத்தாயிரம் தருவதாகக் கூறுகிறார். ஆனால், நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது நூறு ரூபாய் கூட வழங்காதது ஏன் எனப் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்,” என்று விமர்சித்தார்.

திமுக அரசின் சாதனைகள்:

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பள்ளிக்கல்வித் துறையில் பொற்காலத்தை உருவாக்கியவர் அன்பில் மகேஷ் என்று புகழாரம் சூட்டிய லியோனி, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டார்:

மகளிர் உரிமைத் தொகை: ஜூன் மாதம் வரவுள்ள 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்களுக்காகப் பெண்கள் இப்போதே காத்திருக்கின்றனர்.

முதலமைச்சரின் வேகம்: எடப்பாடி பழனிச்சாமியும், மோடியும் இணைந்து உரிமைத் தொகையை நிறுத்த முயற்சிப்பதை அறிந்து, முன்கூட்டியே 5000 ரூபாயை வழங்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

முக்கிய திட்டங்கள்: விடியல் பயணம் (இலவச பேருந்துப் பயணம்), புதுமைப்பெண் திட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களால் பெண்கள் இன்று பொருளாதார ரீதியாகப் பயனடைந்து வருகின்றனர்.

வெற்றி நிச்சயம்:

மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, செய்தி வாசிப்பாளர் எப்படி அறிவிப்பார் என்பதைத் தனது பாணியிலேயே நடித்துக் காட்டிய லியோனி, “அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்ற வேட்பாளர்களைப் டெபாசிட் இழக்கச் செய்து, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெறுவார்” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இறுதியாக, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து முதலமைச்சர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.