”கேப்டனால் தான் இந்த வாழ்க்கை” டைரக்டர் உருக்கம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஜே.பி.பிலிம்ஸ் பேனரில் பி.ரகு தயாரித்து ஆர்.மகாலட்சுமி முருகன் டைரக்ட் பண்ணியிருக்கும் படம் ‘எல்.எஸ்.எஸ்’[ லவ் சப்ஸ்கிரைப் ஷேர்]. வரும் 20ஆம் தேதி ரிலீசாகும் இப்படத்தில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, வினோதினி, படவா கோபி, ஜாவா சுந்தரேசன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : என்.எஸ்.சதீஷ்குமார், இசை : அஷ்வமித்ரா, எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த், ஸ்டண்ட் : தளபதி தினேஷ், பி.ஆர்.ஓ.: சதீஷ் [ எய்ம்]

‘எல்.எஸ்.எஸ்.’சின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பரணி ஸ்டுடியோ தியேட்டரில் பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் கதிரேசன், மேனேஜர்கள் யூனியன் தலைவர் ராஜேந்திரன், நடிகர்கள் இளவரசு, பக்ஸ் பகவதி பெருமாள்,  டைரக்டர் சரண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

‘LSS’ movieபேசிய அனைவருமே படத்தின் தயாரிப்பாளர் குறித்தும் ஹீரோவாக அறிமுகமாகும் ஆதவ் கிருஷ்ணா குறித்தும் பெருமிதமாக பேசினர். ”படத்தின் புரமோ பாடலை எழுதியது மிகவும் மகிழ்ச்சி” என்றார் டைரக்டர் சரண்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஹீரோயின், மியூசிக் டைரக்டர் உட்பட டெக்னீஷியன்கள் அனைவரும் வழக்கம் போல் தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் நன்றி சொன்னார்கள், மீடியாக்கள் ஆதரவைக் கேட்டார்கள்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கடைசியாகப் பேசிய டைரக்டர் மகாலட்சுமி முருகன், “நான் கேப்டனின் ஆபீஸ் பாயாக இருந்த போது எனக்கு எல்லாவிதத்திலும் பேருதவியாக இருந்தவர் கேப்டன். வாழ்க்கையில்  நான் இந்த உயர்வான நிலைக்கு வருவதற்கு கேப்டனும் பிரேமலதாமேடமும் தான் காரணம். அவர்கள் இருவரும் இல்லையெனில் நான் இல்லை. அதே போல் எனக்கு தைரியம் கொடுத்து சென்னைக்கு அனுப்பிய எனது அப்பாவுக்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு பக்கபலமாக இருந்து இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

—    ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.