தரமான சம்பவம் காத்திருக்கு ‘தி பாரடைஸ்’ நானியின் நம்பிக்கை!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

’ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ்’ சுதாகர் செருகுரி தயாரிப்பில், ஸ்ரீகாந்த் ஓடேலா டைரக்‌ஷனில், தெலுங்கு சினிமாவின் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்து, வரும் 24-ஆம் தேதி ஐந்து மொழிகளில் ரிலீசாகிறது ‘தி பேரடைஸ்’ என்ற தெலுங்குப் படம். இதில் கயாது லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன்பாபு, ஈஸ்வரி ராவ், தணிகல பரணி உட்பட பலர் நடித்துள்ளனர். ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் ரிலீஸ் பண்ணும் இப்படத்தின்  ஒளிப்பதிவு : சி.ஹெச்.சாய், இசை : அனிருத், பி.ஆர்.ஓ. : ‘எஸ்-2 சதீஷ்குமார்.

‘தி பாரடைஸ்’-ன் தமிழ்ப்பதிப்பின் புரமோஷன் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று[செப்.17] மாலை நடந்தது.  இதற்காக  ஹீரோ நானி, டைரக்டர் ஸ்ரீகாந்த் ஓடேலா, திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் சென்னை வந்திருந்தனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

“நானி படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம். இப்படம் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்” என்றார் ஸ்வரூப் ரெட்டி.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“தாயைப் பற்றியும் புரட்சியைப் பற்றியும் பேசுகிறது இந்தப் படம்” என்றார் டைரக்டர் ஸ்ரீகாந்த் ஓடேலா.

தி பாரடைஸ்நானி பேசும் போது, “தமிழ் சினிமா எனக்கு பைபிள் மாதிரி. கே.பாக்யராஜ், பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். தமிழ் ரசிகர்களின் பேராதரவால் தான் தமிழில் நானே டப்பிங் பேசியுள்ளேன். நான் நல்ல நடிகனா? இல்லையா? எனத் தெரியாது. ஆனால் உங்களைப் போல நானும் நல்ல ரசிகன், பார்வையாளன். ஒரு மாஸான சினிமாவைப் பார்க்க வேண்டும் என உங்களைப் போல எனக்கும் ஆசை உள்ளது. அப்படிப்பட்ட மாஸான படம் தான் இந்த பாரடைஸ். என்னுடைய சினிமா கேரியரில் மிகவும் கடினமாக உழைத்த படம் பாரடைஸ் தான்.

நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இந்தப் படம் உங்களுக்கு அருமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்சைக் கொடுக்கும். 24-ஆம் தேதி தரமான சம்பவம் காத்திருக்கு” என்றார் மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.