தேசியக் கல்லூரியின் தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாட்டம் !
மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள் இந்திய தேசிய அளவில் ஒவ்வொரு வருடமும் தேசிய விளையாட்டு நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறை சார்பாக தேசிய விளையாட்டு நாள் விழா 29.8.2026 அன்று திருச்சிராப்பள்ளி மாணவர் சாலையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி தலைமையேற்று விளையாட்டு நாள் விழா விழிப்புணர்வு நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் உடல் உறுதியை மேம்படுத்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறபோது தான் வாழ்க்கை மிகப்பெரிய ஆச்சரியங்களோடு கூடிய வெற்றியைத் தரும் என்பதைத் தமது தலைமையுரையில் விரிவாக எடுத்துரைத்தார்.
மாணவர் சாலையில் நடைபெற்ற இச்சிறப்பு விளையாட்டு விழா பேரணியில் மாணவர்கள் தேசிய விளையாட்டு நாள் விழா தொடர்பான பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விளையாட்டின் முக்கியத்துவமும் உடற்கல்வியின் அவசியமும் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடற்கல்வியியல்யல் துறைத்தலைவர் முனைவர் பூபதி இவ்விழாவினை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.