கடன் வசூலிக்கும் ஏஜெண்டுகள் இனி கண்ட நேரத்தில் கண்டபடி கடன்காரர்களை தொந்தரவு செய்ய முடியாது. இவர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியிருக்கிறது ரிசர்வ் பேங்க்.
கடன் வழங்கும் ஒவ்வொரு வங்கியும், தனது ரெக்கவரி ஏஜென்சிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டும். கடன்காரர்களை சந்திக்க செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக தகவல் தெரிவித்துவிட்டுதான் செல்ல வேண்டும். காலை 8 முதல் இரவு 7 மணி வரையில் மட்டுமே தொலைபேசியில் அழைக்க வேண்டும். அதுவும் முறையாக குரல் பதிவு செய்யப்பட வேண்டும். முறையற்ற வழிமுறைகளில் வீடு, கார், டூவீலர், வீட்டின் உபயோகப் பொருட்களை பூட்ட அனுமதி கிடையாது.
தவணைத் தவறிய 30 நாட்கள் வரையில் சாதனங்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்த அனுமதியில்லை. 60 நாட்களுக்குப்பிறகே இதனை செய்ய முடியும். அதுவும், இன்கமிங், எஸ்.எம்.ஸ்., அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ள முடியாதபடி முடக்கக் கூடாது. தவணைத்தொகை கட்டிய ஒரு மணி நேரத்தில் நிறுத்தப்பட்ட சேவையை உடன் தொடர வேண்டும். தவறும்பட்சத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.250 இழப்பீடு வழங்க வேண்டும். சட்டம் அனுமதித்துள்ள வரம்பை தாண்டி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தக்கூடாது. – என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை வங்கிகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நிர்வாகம் சாட்டையை சுழற்றியிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி, எதிர்வரும் 2027 ஆம் வருடம் ஜனவரி-01 முதல் அமலுக்கு வருகிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.