மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா
டிசைன் ஓவியப்பள்ளி போத்தீஸ் நிறுவனம் ஆதரவுடன் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சியில் நடைபெற்றது.
டிசைன் ஓவியப்பள்ளி முதல்வர் நஸ்ரத்பேகம் துவக்க உரையாற்றினார். தாளாளர் மதன், போத்தீஸ் சண்முக வேல், ஓவியர் தனபால், மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓவியர் ஸ்ரீதர், தமிழ்ச் சுடர் தாமல், கோ.சரவணன், பாவலர் அறிவுமதி உள்ளிட்டோர் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் பொற்கிழியும் வழங்கினர்.
வண்ணம் தீட்டும் பிரிவில், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா யு.கே.ஜி மாணவி பி.லக்ஷன்யா முதல் பரிசும் ரூ5000, ராஜாஜி வித்யாலயா சீனியர் செகண்டரி யு.கே.ஜி மாணவி ம.யாழினி யூ.3000, ஸ்ரீபாலா வித்யாமந்திர் மெட்ரிக். பள்ளி எல்.கே.ஜி அ.அமிழினியா மூன்றாம் பரிசு ரூ.2000 பெற்றனர்.
பொம்மை உலகம் ஓவியப் பிரிவில், ஆர்.எஸ்.கே மேல்நிலைப் பள்ளிஃபியோனா ரூஃபி முதல் பரிசு ரூ.5000, ஸ்ரீ குலபதி பாலையா தொடக்கப்பள்ளி எம்.வர்ஷித் கதிர்வேல் எம்.வர்ஷித் கதிர்வேல் இரண்டாவது பரிசு ரூ.3000, ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வி.வசுந்தரா மூன்றாவது பரிசு ரூ.2000 பெற்றனர்.
மாயாஜால காடுகள் ஓவியப்பிரிவில் பெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஜே. கிளாடித் கிறிஸ்டில்டா முதல் பரிசு ரூ.5000, வேங்கூர், செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வி.மயூரி உஷா இரண்டாம் பரிசு ரூ.3000,செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம். ராஜஸ்ரீ, மூன்றாம் பரிசு ரூ.2000 பெற்றனர்.
எந்திரமும் மனித உலகமும் பிரிவில் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஏ. மகிழன் முதல் பரிசு ரூ.5000,பெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி பி. மோனிஷ் ராகவ், இரண்டாம் பரிசு ரூ.3000,செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்சி எஸ்.வி. ஹேமச்சந்திரன் மூன்றாம் பரிசு ரூ.2000 பெற்றனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.