Centralized Kitchen-ல் லாப வாய்ப்புகள் ! உணவக மேலாண்மை தொடர் – 7

உணவக மேலாண்மை தொடர் - 7

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Centralized Kitchen-ல் லாப வாய்ப்புகள்… உணவக மேலாண்மை தொடர்-7

ஒரு இடத்தில் உணவு தயாரித்து பல இடங் களுக்கு பரிமாறும் வாய்ப்பு.  உணவு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் உணவு தயாரிக்கவும், பரிமாறவும் வேலை நிச்சயம்,உணவகங்களில் மட்டுமல்லாமல் பல்வேறு துறை நிறுவனங்களில் கூட உணவுத் துறை வேலை கிடைக்கும்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இன்றைய காலகட்டங்களில் பல பெரு நிறுவனங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏன் ஆயிரக்கணக்கில் கூட பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கென அந்த வளாகத்தி லேயே உணவகங்கள் செயல்படுகின்றன.

ஊழியர்கள் பணம் கொடுத்து சாப்பிடும் முறை, நிறுவனத்தின் மூலம் பணம் செலுத்தும் முறை இலவசமாக அல்லது சலுகை முறையில்  உணவு வழங்கும் முறை என பல வகையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் உள்ளன.  அந்த உணவகங்களில் இப்பொழுதெல்லாம் வேலைவாய்ப்பு மிகுதியாக இருக்கிறது.  அதுவும் இன்றைய காலகட்டங்களில் பெரிய இன்ஜினியரிங் நிறுவனம்,பெரிய மருத்துவமனை, ஐடி நிறுவனம் போன்ற பல துறையைச் சார்ந்த நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்குகேன்டீன் ஒன்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் இப்பொழுது உள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அந்த கேன்டீனில் Kitchen, Service, Cashier, Storekeeper, Housekeeping என பல்வேறு துறைகளிலிலும் வேலைவாய்ப்புபல்கிப் பெருகி வருகிறது.  முன்பெல்லாம் சென்னை பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டுமே இந்த வாய்ப்பு இருந்தது ஆனால் இன்று திருச்சி மதுரை கோயம்புத்தூர் போன்ற அனைத்து ஊர்களிலும் பல தொழில் நிறுவனங்கள் உள்ளன.

அந்த தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான கேண்டீனை நேரடியாகவோ ஒப்பந்த அடிப்படையிலோ நடத்தி ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்கிறார்கள்.அதோடு மட்டுமல்லாமல் ஒரே இடத்தில் இருந்து உணவு சமைத்து பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பும் அளவிற்கு இந்த துறை வளர்ந்து வருகிறது.

இது போன்ற கேண்டீன்களை centralized kitchen என அழைப்பர்.  ஒரே ஒரு இடத்தில் சமைத்து பல நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்து அங்கு சென்று பரிமாறுவது போன்ற அளவிற்கு இந்நிறுவனங்கள் வளர்ந்து வருகிறது. இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் போது பணி நேரமும் அந்தந்த நிறுவனத்திற்கு ஏற்ப நமக்கு எளிதாக அமைந்து விடுகிறது.

இப்படி நேரடியாகவும் பல ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனங்களிலும்உணவுத் துறையில் பணிபுரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இது மட்டுமல்லாமல் இன்னும் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்

-தமிழூர் இரா.கபிலன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.