போதை மாத்திரை, கஞ்சா, மது பாட்டில்கள் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !
திருச்சி தேவதானம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கீழ தேவதான பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 20) என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பாலமுருகனை கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று திருச்சி தென்னூர் இபி ரோடு அலுவலகம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்த மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்த யுவராஜ் (வயது 23) மற்றும் உறையூர் காந்திபுரத்தை சேர்ந்த குரு பிரசாத் (வயது 23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் செல்போன், பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி குழுமாயிகரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சாந்தகுமார் ( 24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி பாலக்கரை ஆலம்தெரு பகுதியில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில் விற்பனை செய்த ஆலம் தெருவை சேர்ந்த சாந்தகுமார் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று ஆழ்வார்தோப்பு கேஸ் குடோன் அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்த சின்னசாமி நகரை சேர்ந்த முபாரக் (வயது 42)என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கண்ட இரண்டு பேரிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பாலக்கரையில் டிப்ளமோ பட்டதாரி வாலிபர் மாயம் திருச்சி ஜூலை 13 திருச்சி பாலக்கரை சங்கிலி ஆண்ட புரம் சுப்பையா தெரு விசெரிப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் பலேந்திரன் வயது 19 இவர் டிப்ளமோ பட்டதாரி இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டில் தனது தாயிடம் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை இது தொடர்பாக அவரது தந்தை முருகன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகார் என்பதில் போலீசார் வழக்கு பதிவு செய்து பலேந்திரனை தேடி வருகின்றனர்.
திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த ரவுடி உள்பட 3 பேர் கைது திருச்சி ஜூலை 13 திருச்சி கருமண்டபம் ஓ பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்ட்ரோல்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை எடுத்து இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்துக்கொள்வது கருமண்டபம் பகுதியை சேர்ந்த ஹேமேஸ்வரன் வயது 24 மற்றும் ஆரோக்கியராஜ் வயது 24 ஆகிய இருவரும் அங்கு கஞ்சா விட்டுக்கொண்டு இருந்தனர் இதை அடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதில் ஹேமவேஸ்வரன் ரவுடி ஆவார்.
இதேபோன்று தில்லைநகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒ பாலம் ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தென்னூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். பிறகு குருமூர்த்தியை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கருமண்டபம் விஷ்வாஸ் நகரை சேர்ந்த பெருமாள் (வயது 38) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெருமாளை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று எடமலைப்பட்டி புதூர் அன்பில் தர்மலிங்க நகர் 1வது தெரு பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மணப்பாறை பகுதியைச் சேர்ந்த குரு (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.செசன்ஸ் கோட் போலீசரகத்துக்கு உட்பட்ட பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெரிய மிளகு பாறை சேர்ந்த மதிவாணன் (வயது 60) என்பவரையும்) பொன்மலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ரெயில்வே காலனி எப் டைப்பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த தென்னூர் அண்டகொண்டான் தெருவை சேர்ந்த ஹரிகரன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று உறையூர் நடுத்தெரு பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த உறையூர் பகுதியை சேர்ந்த ஜெயராம் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட வழக்குகளில்கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.