திருக்குறளுக்கு தனி பல்கலைகழகம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

”சாதி, மதம், இனம் கடந்து மனித குலம் முழுமைக்குமான வாழ்வியல் நெறிகளை 1330  குறட்பாக்களில் தந்த திருவள்ளுவரின் கோட்பாடுகள் மேலாண்மைத் தத்துவங்கள், வாழ்வியல் நெறிகள் மற்றும் தமிழ் இலக்கிய கூறுகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், உலக அளவில் அதை முறைப்படி கற்பிக்கவும் தமிழகத்தில் தனித்துவமான திருக்குறள் பல்கலைக் கழகத்தை நிறுவ வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார், திருச்சியை சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணரும், அறிவியல் தமிழ் எழுத்தாளரும், சங்க இலக்கிய திருக்குறள் ஆய்வாளருமான டாக்டர். எம்.ஏ. அலீம்.

தமிழ் மொழியின் அடையாளமாகவும், உலக நாடுகள் அனைத்தும் போற்றும் வாழ்வியல் வழிகாட்டியாகவும் உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறள் குறித்து சர்வதேச அளவில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் சாத்தியமாகும். உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணிகளை முறைப்படுத்தலாம். உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தமிழகம் நோக்கி வர வழிவகுக்கும் என்பதாகவும் முன்மொழிகிறார் அவர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் தமிழார்வலர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்ச்செம்மல் விருதை, திருச்சி மாவட்டத்தின் சார்பில் பெற்றவர் மருத்துவர் எம்.ஏ.அலீம் என்பது குறிப்பிடத்தக்கது.

–              அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.