மீண்டும் சிக்கிய காவல் துணை ஆய்வாளர் சரவணன்…!
மென் பொறியாளர் கவின் கொலை வழக்கில், கைதான காவல் துணை ஆய்வாளர் சரவணன் மீண்டும் ஒரு கொலை சதி வழக்கில் கைது.
காதல் செய்ததினால் 2025 ஆம் ஆண்டு ஜுலை 27 ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் KTC நகரில் கொலை செய்யப்பட்டவர் மென் பொறியாளர் கவின். இந்த ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் இவரது அப்பா காவல் துணை ஆய்வாளர் சரவணன், அம்மா காவல் துணை ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த ஒரு கொலை செய்ய முயன்ற வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் காவல் துணை ஆய்வாளர் சரவணன்.
மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலராக செயல்பட்ட வழக்கறிஞர் முருகானந்தம் (இவர் 80% மாற்றுத்திறனாளி ஆவார்) 2025 ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் பள்ளி தாளாளர் தண்டபாணி ஏவிய கூலிப்படையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தில் தலைமை தாங்கிய தண்டபாணி உட்பட 28 நபர்கள் பிணை கிடைக்காமல் கோவை சிறையில் இருந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டில் தண்டபாணி உட்பட சிலரை பாளையங்கோட்டை சிறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைத்துறை இடம் மாற்றம் செய்தது.
தேன் மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் அவரது மகன் ஆகியோர், ஏற்கனவே ஆணவக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவல்துறை ஆய்வாளர் சரவணன் என்பவரோடு, பாளையங்கோட்டை சிறையில் சிறை கூட்டாளியாகியுள்ளார்.

சிறை கூட்டாளிகளான துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் தேன் மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி ஆகியோர் அடுத்த கொலைக்கு சதி திட்டம் தீட்டி உள்ளனர். கடந்த ஓராண்டுகளாக பிணை கிடைக்காமல் சிறையில் இருக்கும் தண்டபாணி தலைமையிலான வகையறாக்களுக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குறிப்பாக சாட்சிகள் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ள (Vallarable Witness Deposition Centre) தர்மபுரி நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாக உள்ளது.
வழக்கு விசாரணை முடிவில் உறுதியாக தண்டனை கிடைக்கும் என அறிந்த தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி, வழக்கை பலவீனப்படுத்த கவின் வழக்கின் கொலை குற்றத்தில் ஈடுபட்ட துணை ஆய்வாளர் சரவணனிடம் ஆலோசனை கேட்டுள்ளார். ஆலோசனைக்காக பெரும் தொகையை பெற்றுக்கொண்டு சதி திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார்.
சிறை கூட்டாளிகள், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கேரளாவில் வாழ்ந்து வரும் ஒரு கூலிப்படையை நியமனம் செய்துள்ளனர். வழக்கறிஞர் முருகானந்தம் வழக்கில் சம்பவ சாட்சியம் புகார் தாராருமான தங்கவேல் என்பவரை மூன்று நாட்களாக வேவு பார்த்து கடந்த ஜூலை 7 ஆம் தேதி அன்று அதிகாலையில் தாராபுரம் அருகாமையில் உள்ள அவரது மில்லுக்கு முன்பாக வைத்து கொடூரமாக வெட்டி சாய்த்து உள்ளனர்.
குத்துயிரமாய் கொலை உயிருமாய் வெட்டுப்பட்டு கிடந்த தங்கவேல் என்பவர் தன்னம்பிக்கை மற்றும் மற்றவர்கள் உதவியோடு தனியார் மருத்துவமனைக்கு சென்று தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். புகார்தாரரை, சம்பவ சாட்சியை கொலை செய்தால் வழக்கு நீர்த்துப் போய்விடும் என தப்பு கணக்கு போட்ட பணம் மற்றும் அதிகாரம் படைத்த கொலைகாரர்களுக்கு எதிராக தாராபுரத்தில் பல்வேறு இயக்கங்கள் அரசியல் கட்சிகள் திரண்டு எழுந்துள்ளனர்.
இந்த வழக்கில் உயர் மட்ட காவல் துறை அதிகாரிகளும் நேர்மையாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேர்மையான காவல்துறையினருக்கு ஒரு சல்யூட்
மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு கவின் வழக்கின் கொலை குற்றவாளியான துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் தேன் மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி வகையறா களுக்கு, எதிரிகள் எதிர்பார்க்காத தண்டனையை பெற்றுத் தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் பெற்று தரும் காலம் விரைவில் வரும் .
— அசீர் ரஞ்சிதம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.