அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திட்டங்களை எடுத்துரைத்தாலே வெற்றி உறுதி…!திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

“எதிர்க்கட்சியினர் நம்மைத் திட்டி வாக்கு கேட்டாலும், நமது முதலமைச்சர் தீட்டிய திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தாலே நமது வெற்றி உறுதி” என திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.

தீவிர வாக்கு சேகரிப்பு

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சூரியூர் மற்றும் காந்தலூர் ஊராட்சிகளில் உள்ள வீரம்பட்டி, சின்ன சூரியூர், பெரிய சூரியூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஜல்லிக்கட்டு பெருமையும் வளர்ச்சிப் பணிகளும் அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாவது:

யாவரும் கேளீர்

சூரியூர் பெருமை: தமிழகத்தில் எங்கு பேசினாலும் எனது தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் கிராமத்தின் ஜல்லிக்கட்டு பெருமையைப் பேசுவேன். தமிழக துணை முதலமைச்சரும் திருச்சி ஜல்லிக்கட்டு என்றால் அது சூரியூர் தான் எனக் குறிப்பிடுவார். இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை அடிக்கல் நாட்டின் நமக்கு திறந்து வைத்தவரும் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் தான் விளைவாகவே தமிழகத்தின் இரண்டாவது ஜல்லிக்கட்டு மைதானம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

நிதி ஒதுக்கீடு: கடந்த 2021 முதல் 2026 வரையிலான திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில், சூரியூர் ஊராட்சியில் மட்டும் சுமார் ₹6 கோடியே 21 லட்சத்து 25,501 மதிப்பீட்டில் சாலைகள், சமுதாயக் கூடம், சீரணி அரங்கம், சிறு பாலங்கள் மற்றும் குளம் சீரமைப்பு என எண்ணற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மக்கள் நலத் திட்டங்கள்

நீங்கள் அளித்த வாக்கினால் தான் தமிழகம் முழுவதும் பின்வரும் திட்டங்கள் சாத்தியமானது என அவர் பட்டியலிட்டார்:மகளிர் உரிமைத் தொகை & விடியல் பயணம் (இலவச பேருந்து வசதி), இல்லம் தேடி கல்வி & காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் & நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள்.”எதிர்க்கட்சியினர் நம்மைத் திட்டமிட்டு திட்டி வாக்கு கேட்கிறார்கள். ஆனால் நாம் யாரையும் திட்டி வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்லை. தமிழக முதலமைச்சர் தீட்டிய (டி.டி.டி – திட்டங்கள்) மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொன்னாலே போதும்.”

மூன்றாவது முறையாக ஆதரவு கோரிக்கை

தன்னுடைய சொந்தத் தொகுதியான திருவெறும்பூரில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக மூன்றாவது முறை களம் காண்பதாகக் குறிப்பிட்ட அவர், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கும்பக்குடி கங்காதரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பழங்கனாங்குடி சுதாகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.