அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பி.ஆர்.ஓ.யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! திமுக, அதிமுக மீது பாய்ந்த சினிமா புள்ளிகள்! 

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனின் 2026-28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்.. தலைவர் –பி.யுவராஜ், செயலாளர் –விஜயமுரளி, பொருளாளர் – வீ.கே.சுந்தர், துணைத் தலைவர்கள்—எஸ்.புவனேந்திரன், ’எஸ்-2’ சதீஷ்குமார், இணைச் செயலாளர்கள்—பாலன், ஆர்.உதயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.

இந்த புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.28-ஆம் தேதி இரவு நடந்தது. விழாவுக்கு பள்ளிக்கல்வி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து புதிய நிர்வாகிகளுக்கு வெற்றிச் சான்றிதழையும் அடையாள அட்டையையும் வழங்கினார். சீனியர் பி.ஆர்.ஓ.க்களான சுரேஷ் சந்திராவையும் டைமண்ட் பாபுவையும் கெளரவத் தலைவர்களாக அறிவித்தார் விஜயமுரளி.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

விழாவில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன், ஃபெப்சி தலைவர் ஆர்கே.செல்வமணி, தவெககாரர்களான  டைரக்டர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், எழுத்தாளர்கள் சங்கத்தின் புதுத்தலைவர் சேரன், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் ரவி மரியா ஆகியோரும் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், மகேஷ்ராஜ் பசலியான், செளந்தர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மற்றவர்கள் எல்லாம் பி.ஆர்.ஓ.யூனியன் சிறப்பாக செயல்பட வாழ்த்திப் பேசினார்கள்.

யாவரும் கேளீர்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தவெக டி.சிவா, ”முன்னெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் டிராஃபிக் போலீஸ், பேட்ரோல் போலீஸுக்கு லஞ்சம் கொடுத்து மாளாது. ஆனா இப்ப எல்லாமே மாறிருச்சு. ஒருபைசா யாருக்கும் கொடுக்க வேண்டியதில்லை. இப்படி ஒரு எளிமையான அமைச்சரை இதுவரை நான் பார்த்ததேயில்லை” என அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஓவரா சோப் போட்டார் நிஜ நிலவரம் தெரியாத டி.சிவா.

டைரக்டர் சேரனோ இன்னும் ஒருபடி ஏறி, “இதுக்கு முன்னால் நடந்த ஆட்சிகளின் போது தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் செத்துச் செத்துப் பிழைத்தார்கள். நம்ம பிரச்சனையைப் பத்தி எது சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஆனா இப்ப நம்ம ஜோசப் விஜய் ஆட்சியில் அப்படி நடக்காது. தயாரிப்பாளர்களுக்கும் இது தான் நல்ல காலம். இப்ப பிழைத்தால் தான் உண்டு” என திமுகவையும் அதிமுகவையும் எகிறியடித்தார் சேரன்.

ஆர்வி.உதயகுமாரும் நடிகர் ரவிமரியாவும் இதே பாணியில் திமுகவையும் அதிமுகவையும் சகட்டுமேனிக்குத் தாக்கிப் பேசி, பி.ஆர்.ஓ.யூனியன் புதிய நிர்வாகிகளை சங்கடத்தில் ஆழ்த்தினார்கள்.

‘புனிதர்’ ஜோசப் விஜய்யின் யோக்கியதை போகப்போகத் தெரியும். எல்லோருக்கும் புரியும்.

—  ஆண்டவர் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.