அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மே.22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ‘சிஸ்டம்’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இந்தி இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிஸ்டம்’ படம் மே.22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் பவேஜா ஸ்டுடியோஸ் பேனரில் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள ‘சிஸ்டம்’ படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘சிஸ்டம்’ குறித்து

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக்

2026 June 11 - 17 Angusam Book

“ பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த , பரபரப்பான படம் இது.  இப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். இந்தப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா

“ முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட  உறுதியான இரண்டு பெண்களின் கதையாக உருவாகியுள்ள  விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா தான் ‘சிஸ்டம்’. சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. பிரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது”.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.