“உலகத் தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவதே முதல்வரின் நோக்கம்” ராகுல் காந்தி தான் 2026 இல் பிரதமர், பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற யூகத்துக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது, அனுமதி பெறாத இடத்தில் ரீல்ஸ் எடுத்து சுற்றுலா துறை என்று புகார் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி.
சுற்றுலாத் துறையை சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கும் ‘ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியா’ அமைப்பின் தேசிய மாநாடு 2026-ன் தொடக்க விழா கோவையில் தொடங்கியது.மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆதரவுடன் ஸ்கால் இன்டர்நேஷனல் கோவை கிளை ஏற்பாடு செய்திருக்கும் இந்த விழா, கோவை லே மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சர் சம்பத்குமார், அமைச்சர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் ராஜேஷ்குமார் பேசும்போது, “இந்த மாநாடு கோவையில் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. உலக அளவில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் வருகை தந்திருப்பது பெருமைக்குரியது. இந்த அமைப்பு பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் சுற்றுலாத்துறையில் முதன்மை பெற்ற மாவட்டம். பல புரட்சியாளர்களை வழிநடத்திய மண் இது. தமிழக முதல்வர் அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்பதற்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
அறம், பொருள், இன்பம் என்ற வளர்ச்சி நோக்கில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.மேலும் அவர், “200 கோடி ரூபாய் செலவில் மாமல்லபுரத்தை இந்திய அளவில் முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்றும் திட்டம் உள்ளது. உலக அளவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆன்மீக சுற்றுலா, மலை சுற்றுலா, கோயில் சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலை ஏற்றம் போன்ற சுற்றுலா வசதிகளை வெளிநாடுகளைப் போலக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தொழில், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் கோவை, ஜி.டி. நாயுடு வாழ்ந்த மண் என்றும் அவர் நினைவூட்டினார். முதல்வரின் நோக்கம் சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் முன்னேற்றி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே என்றார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், மாவட்ட அளவில் ஒவ்வொரு துறையினரையும் அணுகி என்ஓசி பெற்று, உயர்மட்டக் குழு அமைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்.சுற்றுலா இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், அனுமதியின்றி சுற்றுலா இடங்கள் குறித்து ரீல்ஸ் மற்றும் தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.காங்கிரஸ் கட்சி 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் பங்கேற்றுள்ள நிலையில், கூட்டணியோடு இணைந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம் என்றும், கீழ் மட்டத்தில் வார்டு வாரியாகக் கட்சியை மேம்படுத்தும் பணி தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.