புளியங்கொட்டை வெறும் கழிவு அல்ல !

அட இது தெரியாம போச்சே - 25

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஒரு காலத்தில், வீட்டில் சமையலுக்கு புளியை பயன்படுத்திவிட்டு அதன் கொட்டைகளை சேகரித்து வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இன்றோ, பெரும்பாலும் கொட்டை நீக்கம் செய்யப்பட்ட புளி தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் புளியங்கொட்டைகளால் என்ன பயன் என்று யோசித்திருக்கிறீர்களா?

ஆம், புளியங்கொட்டை வெறும் கழிவு அல்ல, அதில் பல பயன்கள் உள்ளன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

உணவில் : கொட்டையை வறுத்து உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிடுவார்கள். புளியங்கொட்டை மாவு கூழ், சூப், சாஸ் போன்றவற்றை கெட்டியாக்க பயன்படுகிறது.

மருத்துவத்தில் : சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் வயிற்றுப்போக்கு, செரிமான கோளாறு, புண் போன்றவற்றுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் உள்ளன.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொழிற்சாலைகளில் : புளியங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் பசை, ஜவுளி தொழிலில் நூலுக்கு கஞ்சி போடவும், காகிதம், ஒட்டும் பசை தயாரிக்கவும் பயன்படுகிறது.

சாதனங்களில்: தோலை மென்மையாக்கும் தன்மைக்காக சில கிரீம், ஸ்கிரப் தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.

விவசாயத்தில்: கொட்டை தூள் கால்நடை தீவனத்தில் சிறிய அளவில் சேர்க்கப்படுவதுண்டு.

—  பேரா.சா.அருள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.