சரக்கு தட்டுப்பாடு – டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முற்றுகை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 32 மன மகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த 15 நாட்களாக போதிய அளவு சரக்கு சப்ளை செய்யப்படவில்லை. மிகவும் விலை குறைந்த  மதுபான பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று எஃப் எல் 2 (மனமகிழ் மன்றங்கள்) திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்குமார், சிவகுமார், கார்த்திகேயன், ராஜா, சிவா கண்ணன் உள்ளிட்ட மனமகிழ் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று திருச்சி துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் டாஸ்மாக் மேலாளர் அதியமான் கவியரசு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்போது மனமகிழ் மன்றத்தினர் தரப்பில், நாங்கள் ஆண்டுக்கு ரூபாய் 25 லட்சம் உரிமம்கட்டணம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு செலுத்தி தொழில் செய்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் ஆர்டர் கொடுக்கும்போதே மதுபானங்களுக்கான தொகையையும் முன்கூட்டியே செலுத்துகிறோம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஆனால் கடந்த 15 நாட்களாக மது பிரியர்கள் விரும்பும் சரக்குகள் வழங்கப்படவில்லை. அதேநேரம் அந்த சரக்குகள் டாஸ்மாக் மதுபான கடைகளில் கிடைக்கிறது. எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சரக்கு வழங்க வேண்டும் என்றனர்.

இந்த முற்றுகை போராட்டம் டாஸ்மாக் மேலாளர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.