அரசுத் துறை சார்ந்த பணிக்கு ஏன் தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுகிறது ? எவ்வளவு பெரிய ஆபத்து !

பல்லாயிரம் கோடி புழங்கும் மெட்ரோ பணிகளுக்கே கூட, இன்னின்ன நிறுவனங்கள் டெண்டரில் பங்கெடுத்தன, இந்த நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிடும் அரசு இந்த மாதிரி பணிகளுக்கான process-ஐ மூடி மறைப்பது ஏன்? எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனவரி 30ம் தேதி வரை deadline இருக்கும்போது application linkஐ தங்கள் இஷ்டத்திற்கு close செய்து open செய்பவர்கள் யார்? பள்ளிக்கல்வி துறை இந்த மாதிரி திரைமறைவு வேலைகள் பார்ப்பது இது முதல் தடவை அல்ல.