2018 வரை internet வசதியே இல்லாத ஊரில் குடியிருந்த ஷெமார் ஜோசப் இன்று talk of the internet 23 வயது Shemar Joseph ! எப்படி சாத்தியம் ஆனது !

0

Caribbean Cricket League போட்டி நடக்கிறது.. மறு நாள் மேட்ச் க்காக Guyana அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்….. நாளின் கடைசியில் ஒல்லியான உருவம்…காலில் ஒழுங்கான ஷூ கூட இல்லை…ஒரு நெட் பவுலர் ஓடி வந்து பால் போட தொடங்குகிறார்… பால் விர்ரென்று போகிறது…. அடுத்தடுதத்து பால் போடுகிறார் அணியின் முக்கிய பேட்ஸ்மென் திணறுகிறார்……இதை பார்த்த கயானா அணியின் கிரிக்கெட் அட்வைஸர் (நம்மூர் பிரசன்னா அகோரம் ) யார்டா நீ என்ன ஏது என கேட்க…

“சார் நான் Mallல செக்யூரிட்டியா வேலை பார்க்குறேன்…. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்… இல்லைன்னா இன்னைக்கு பேட்டா கிடைக்காது… எனக்கு பவுலிங் போட பிடிக்கும் அதனால் கேட்டு உள்ளே வந்தேன் ” என்கிறார்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

ஷெமார் ஜோசப்,
ஷெமார் ஜோசப்,

உடனே கயானா அணியின் கேப்டனை அழைக்கிறார் பிரசன்னா… இவர் நாளைய மேட்ச்சில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்… மளமளவென வேலைகள் நடக்கிறது… கண்ணீர் மல்க அந்த contractல் கையெழுத்து போடுகிறார் அந்த இளம் பவுலர்…

- Advertisement -

4 bismi svs

“நாளைக்கு எவ்வளவு ஸ்பீட் போடுவ? ” என கேட்கிறார் பிரசன்னா “எவ்வளவு ஸ்பீட் போடணும்? ” என்று பதில் வருகிறது…. பதில் தந்தவர் தான் இன்றைக்கு 27 வருடங்களுக்கு பிறகு ஆஸி மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் க்கு வெற்றி தேடி தந்த 23 வயது Shemar Joseph!! நான்காவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார்

பாரகுரா என்று கயானா நாட்டின் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த ஷெமார். அந்த கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது அதனால் சரியான படிப்பு கூட இல்லை… பிறகு தந்தையுடன் மரம் வெட்டும் வேலை… கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் எங்கு சென்றாலும் அதை விளையாட மோகம்…. கயானா கிளப்களில் கிடைக்கும் ஆட்டங்களில் விளையாடி வந்தார்….பிறகு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தார்….இடை இடையே first class ஆட்டங்கள் விளையாடினார்…வறுமை விட்டபாடில்லை…. இறுதியாக செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்தார் … காலம் அவரை இன்று வேறொரு தளத்தில் நிறுத்தியுள்ளது

கால் விரலில் காயத்துடன் இன்று களமிறங்கியவரிடம் ஆட்டம் முடிந்த பின் வலி தெரியலையா என கேட்க…. அதெல்லாம் தெரியவில்லை அணி ஜெயிக்க வேண்டும் என பெரும் சிரிப்புடன் முழங்கினார்…. அந்த சிரிப்பை பார்த்து இன்று இன்னொரு மேற்கிந்தியத் தீவுகள் கிராமத்தில் இன்னொரு சிறுவனுக்கு புது நம்பிக்கை பிறந்து இருக்கும்!!

2018 வரை internet வசதியே இல்லாத ஊரில் குடியிருந்த ஷெமார் ஜோசப் இன்று talk of the internet கற்பனைகளில் மட்டுமே சாத்தியமாகும் ஆனாலும் மனதை வருடி புது உத்வேகம் தரும் கதைகளை Fairy Tale என சொல்வார்கள்… எப்போதாவது அது நிஜத்தில் நடக்கும்…அப்படி ஒரு Fairy Tale இன்று நடந்தேறியது

– இரா. இராஜகோபாலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.