திருச்சியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கையுந்துபந்து (volley ball) போட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கானவ கையுந்துபந்து (volley ball) போட்டி ! – திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகமும் தனலெட்சுமி சீனிவாசன் கல்வி குழுமமும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான கையுந்துபந்து போட்டி வரும் 12.07.2024 மற்றும் 13.07.2024 ஆகிய தேதிகளில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

Trichy District volley ball assosication
Trichy District volley ball assosication

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

இது தொடர்பாக, திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகத்தின் (Trichy District volley ball assosication) செயலர் எஸ்.கோவிந்தராஜன் விடுத்துள்ள அறிக்கையில், இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அணியினர் 12.07.2024 அன்று காலை 8.00 மணிக்கும், மாணவிகள் அணியினர் 13.07.2024 அன்று காலை 8.00 மணிக்கும் திருச்சி, சமயபுரம் டோல்பிளாசா அருகில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மைதானத்திற்கு வந்து சேர வேண்டும் என்பதாக தெரிவிக்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இத்தொடர் போட்டியின், இறுதிப்போட்டி 13.07.2024 மாலை 4.00 மணிக்கு நடைபெறும் என்பதாகவும்; வெற்றி பெறும் அணியினருக்கு பரிசு, சான்றிதழ்கள் மற்றும் கோப்பை வழங்கப்படும் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மேலும், இத்தொடர்போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை தலைவர் டாக்டர் தர்மர் – 7358432023 மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாபன் – 9865002928 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறார்கள்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.