பள்ளிச்சிறுவர் – சிறுமியர்களுடன் கோளரங்கம் சென்று வந்த போலீசார் !
பள்ளிச்சிறுவர் – சிறுமியர்களுடன் கோளரங்கம் சென்று வந்த கே.கே.நகர் போலீசார் ! காக்கிச் சீருடையில் போலீசாரை விரைப்பாகவே பார்த்து பழக்கப்பட்ட பொதுப்புத்தியிலிருந்து மாறுபட்டு, பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமிகளுடன் குதூகலமாக ஓர் நாளை செலவிட்டிருக்கிறார்கள் திருச்சி மாநகர கே.கே.நகர் போலீசார்.
திருச்சி மாநகர கே.கே.நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம் குடிசைப் பகுதி சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுடன் போலீசார் நல்லுறவை பேணி வருகின்றனர். இக்குழந்தைகளின் கல்வி தொடர்பான உதவிகள் தொடங்கி விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இத்தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக கேகே நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ச.பாலகிருஷ்ணன் தலைமையில், சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் 30 பேரை வெளி நிகழ்ச்சிக்காக உரிய பாதுகாப்புடன் அண்ணா அறிவியல் கோளரங்கத்திற்கு கூட்டிச் சென்று மகிழ்வித்தனர்.
வருங்காலத்தில் அவர்களின் சமுதாய நல்வரவுகளை மற்றும் நல்லொழுக்கங்களை, வளர்ச்சிகளை பேணிக்காக்க மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாநகரம் தெற்கு காவல் துணை ஆணையரின் ஆலோசனையின்படியும் இந்த சமூகப்பணியை கே.கே.நகர் போலீசார் தொடர்ந்து வருகின்றனர்.
– பிரபு.