தாபா ஓட்டலில்  ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட பாஜக மா.செவுக்கு மண்டை உடைப்பு – 3 பேர் கைது !

0

ஜெய் ஸ்ரீ ராம் என கூச்சலிட்டவருக்கு மண்டை உடைப்பு  !   3 இளைஞர்கள் கைது

பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார்
பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார்

https://businesstrichy.com/the-royal-mahal/

தாபா ஓட்டலில்  ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட பாஜகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  வேலூர் பாஜக மாவட்ட செயலாளர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதிகளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை  யாத்திரை நடத்த வருகை தரும் நிலையில், அண்ணாமலையை வரவேற்க மாவட்ட பாஜகவினர் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

அதன்படி ஆம்பூர், மாதனூர் தேசிய நெடுஞ்சாலைகளில் பேனர் வைக்க இடங்களை ஆய்வு செய்த பின்னர்  பகுதியில் உள்ள  தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள வடமாநிலத்தவர்கள் நடத்தி வரும் தாபா ஓட்டலில், பாஜகவினர்  உணவு அருந்த உள்ளே நுழைந்தனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அந்த தபா ஓட்டல்
அந்த தபா ஓட்டல்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அங்கே சில முஸ்லீம் இளைஞர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார் மற்றும் சிலர் திடீரென தாபாவில் அமர்ந்து சாப்பிடுவதற்கு முன் .’ஜெய் ஸ்ரீராம்’   ஜெய் ஸ்ரீராம்’  என  கத்தி கூச்சல் போட்டனர் அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்த அந்த முஸ்லீம் இளைஞர்கள் இதே போல்  கத்த கூடாது அமைதியாக இருக்க என்று சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் ஜெய் ஸ்ரீராம்’   ஜெய் ஸ்ரீராம்’  கத்தி கூச்சல் போட்டதால்

கடுப்பான இளைஞர்கள் கோஷம் போட்ட பாஜகவினரை நய்ய புடைத்தனர் , இதில் லோகேஷ் குமாருக்கு தலை ,கை, கால்களில்  பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில்  அவரை உடனடியாக  மீட்டு  குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர் பாஜகவினர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன்  தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தேடிவந்த நிலையில்

கைது செய்யப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள்.

வேலூர் மாவட்டம் வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (25), இஸ்மாயில் (25), வசீம் (23) மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து ஆம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

– மணிகண்டன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.