15 வயது சிறுமி – சிக்கலான சிறுகுடல் கட்டிகள் – மாற்றி யோசித்த திருச்சி ஜி.எச். குடல் மருத்துவத்துறை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சிக்கலான கணையநீர் கட்டியை மேம்பட்ட எண்டோஸ்கோபிக் செயல்முறையின் வழியே வெற்றிகரமாக அகற்றி வியத்தகு சாதனையை படைத்த திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின், இரைப்பை குடல் மருத்துவத் துறை மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

பியூட்ஸ்-ஜெகர்ஸ் (Peutz–Jeghers) நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு புற்றுநோய் அல்லாத சிறுகுடல் கட்டியை (பாலிப்கள்) எண்டோஸ்கோபி வழியாகவே அகற்றியிருக்கிறார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அந்த சிறுமிக்கு சிறுகுடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அக்கட்டிகளின் அளவு மற்றும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பெரிய சிறுகுடல் கட்டிகளால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க எண்டோஸ்கோபி சிகிச்சை முறையை தேர்வு செய்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, ஒரே ஒரு முறை செய்த எண்டோஸ்கோபி சிகிச்சையிலேயே, எவ்விதச் சிக்கல்களுமின்றி ஐந்து பெரிய டியோடினல் (முன் சிறுகுடல் பகுதி) பாலிப்கள் வெற்றிகரமாக அகற்றியிருக்கிறார்கள்.

பியூட்ஸ் – ஜெகர்ஸ் நோய் என்றால் என்ன?

பொதுவில், பியூட்ஸ் – ஜெகர்ஸ் நோய் என்பது STK11/LKB1 மரபணுவில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும், பரம்பரை ரீதியான புற்றுநோய் அல்லாத பாலிப் கட்டி நோயாகும். செரிமான மண்டலம் முழுவதும் பாலிப்கள் தோன்றக்கூடும் என்றாலும், இந்நோய் பெரும்பாலும் சிறுகுடலையே அதிகம் பாதிக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இத்தகைய பாலிப்கள், மருத்துவ ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்கிறார்கள். குறிப்பாக,  செரிமான மண்டல இரத்தப்போக்கு மற்றும் அதனால் நாள்பட்ட இரத்த சோகை; குடல் அடைப்பு; குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் குடல் செருகல்  (Intussusception) ஏற்படுதல்; மீண்டும் மீண்டும் ஏற்படும் வயிற்று வலி மற்றும் பாலிப் தொடர்பான பிற சிக்கல்கள் உருவாகும் என்பதாக குறிப்பிடுகிறார்கள்.

புதிய மருத்துவ அணுகுமுறை சாத்தியமானது எப்படி?

முக்கியமாக, இந்நோய் செரிமான மண்டலம் மற்றும் செரிமான மண்டலம் சாராத உறுப்புகளிலும் புற்று வருவதற்கான அதிக  அபாயத்துடன் தொடர்புடையது என எச்சரிக்கிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் முறையான கண்காணிப்பு தேவைப்படுகிறது; தேவைப்படும்போது சரியான நேரத்தில் எண்டோஸ்கோபி பரிசோதனை மற்றும் பாலிப் அகற்றும் சிகிச்சை (polypectomy) மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாக அறிவுறுத்துகிறார்கள்.

trichy-gh-doctors

இந்த பின்புலத்தில்தான், ஒரே சிகிச்சையில் பல பெரிய சிறுகுடல் பாலிப்களை வெற்றிகரமாக அகற்றியது, சிக்கலான பாலிபோசிஸ் நோய்க்குறிகளைக் கையாள்வதில் மேம்பட்ட எண்டோஸ்கோபி நுட்பங்களை இரைப்பை குடல் மருத்துவத் துறை மருத்துவர்கள் கையாண்டிருக்கிறார்கள். இது அதிகளவிலான இரத்தப்போக்கு மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளைத் தவிர்ப்பதுடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இரத்தப்போக்கு, குடல் அடைப்பு மற்றும் குடல் செருகல் போன்ற சிக்கல்களையும் தடுத்திருக்கிறது என்பதும் இங்கே அழுத்தமாக பதிவு செய்ய வேண்டிய விசயமாகிறது.

இவ்வெண்டோஸ்கோபி சிகிச்சையானது, டீன் டாக்டர் குமரவேல், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பிரசன்னா மற்றும் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், இரைப்பை குடல் மருத்துவத் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டாக்டர் ஷஃபிக் மற்றும் அவருக்கு உதவியாக உதவிப் பேராசிரியர் டாக்டர் கிஷ்வந்த் ஆகியோரை கொண்ட மருத்துவக்குழுவினரின் மற்றுமொரு சாதனையாக இடம்பிடித்துவிட்டது.

– அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.