முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டி ! திருச்சி தேசியக் கல்லூரி சாதனை!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டரங்கில் செப்டம்பர் 12, 2026 அன்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி  சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பான இறுதிப் போட்டியில், தேசியக் கல்லூரி அணி பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை 11-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

போட்டி முழுவதும் தேசியக் கல்லூரி அணி சிறந்த குழு ஒற்றுமை, திறமை, மன உறுதி மற்றும் விளையாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்தியது. சிறப்பான சாதனை படைத்த வீரர்களுக்கும் பயிற்சியாளர் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி மற்றும் செயலர் திருமிகு. கா. ரகுநாதன் , உடற்கல்வியியல் துறைத் தலைவர் முனைவர் பூபதி ஆகியோர் வீரர்களின் சிறப்பான செயல்திறனைப் பாராட்டி, கல்லூரிக்குப் பெருமை சேர்த்ததற்காக வாழ்த்தினர். உடற்கல்வித் துறையின் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், எதிர்கால போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.