போலீசார் அதிரடி வேட்டை : லாட்டரி சீட்டு, போதை மாத்திரைகள் பறிமுதல்!
திருவரங்கம் ராகவேந்திரபுரம் ஆர்ச் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற லால்குடி தாளக்குடி எஸ் எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் ரூபாய் 2100 பணம், நோக்கியா செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இதேபோன்று பாலக்கரை துரைசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே லாட்டரி சீட்டு பெற்ற உறையூர் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் சித்தீக் (28) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் லாட்டரி சீட்டுகள் , ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உறையூர் அரச மரத்தடி டாக்கர் ரோடு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற திருச்சி மருதாண்ட குறிச்சி குழுமணி ரோடு லிங்கம் நகர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (46) உறையூர் மேட்டு தெரு ரேஷன் கடை அருகே லாட்டரி சீட்டு விற்ற உறையூர் சாலை ரோடு அச்சுக்கட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த ரசூல் முகமது ( 45 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
மேலும் ஸ்ரீரங்கம் மேல கொண்டையம்பட்டி பிள்ளையார் கோவில் தெற்கு தெரு பகுதியில் பணம் வைத்த சூதாடிய பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அருண் ( 41 ), விக்னேஷ் (35 ), செல்வராஜ் (40) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் கைப்பற்றப்பட்டது. மேலும் கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் திருச்சி ஜெயில் ரயில்வே ஜங்ஷன் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த முகில் ( 21 ) என்பவரை கைது செய்தனர்.
மேலும் திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை முதலியார் சத்திரம் ஆழம் தெரு பகுதியைச் சேர்ந்த அல்லாஹ் பிச்சை ( 41 ) என்பவரை கைது செய்தனர் இவர் சந்தேகப்படும் ரவுடி பட்டியலில் உள்ளார்.
இவரிடமிருந்து 27 போதை மாத்திரைகள் 2 ஊசி ரூபாய் 710 ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இதேபோன்று தில்லை நகர் ரெட்டை வாய்க்கால் பகுதியில்புகையிலைப் பொருட்கள் விற்ற தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சோனி என்கிற பிரசாந்த் (வயது 21) என்பவரை தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் கைது செய்தார். அந்த நபரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் மோட்டார் சைக்கிள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.