பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட 2 கோடி கேட்ட த.வெ.க நிர்வாகி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல்முறையே ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்ற த.வெ.க.வினர், தற்போது பஞ்சாயத்து தேர்தலையும் குறிவைத்து கிளமிறங்கத் தொடங்கிவிட்டார்கள்; அதற்காக இப்போதே பேரம் பேசி வசூல் வேட்டையிலும் இறங்கிவிட்டார்கள் என்ற அதிர்ச்சி விவகாரம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் ஜி.கே.சங்கரிடம், பல்லடம் கிழக்கு ஒன்றிய த.வெ.க. செயலாளர் பாலசுப்ரமணியம் பேசுவதாக சமூக ஊடகங்களில் வெளியான அந்த ஆடியோவில், கணபதி பாளையம் பஞ்சாயத்தில் போட்டியிடும் விருப்பத்தை தெரிவிக்கிறார் பாலசுப்ரமணியம். அதற்கு, “1 கோடியிலிருந்து 2 கோடி வரையில் செலவாகுமே? எப்படி செலவு செய்வாய்?” என்பதாக கேள்வி எழுப்புகிறார் ஜி.கே.சங்கர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த ஆடியோ வைரலான நிலையில், “கூட்டத்தில் பேசியதை யாரோ வெளியில் கசியவிட்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் இலஞ்சமாக கொடு என்றெல்லாம் கேட்கவில்லை. இவ்வளவு செலவாகும் என்றுதான் சொன்னேன்” என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார், ஜி.கே.சங்கர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தனக்கு இலஞ்சமாக கேட்கவில்லை என்றால், வேறு யாருக்காக கேட்டார் என்ற கேள்வி எழுகிறது. அதையெல்லாம்விட, ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடவே 2 கோடி செலவாகும் என்றால், அப்படி என்ன செலவு? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இன்னும் என்னென்ன  விவகாரங்கள் வெடிக்க காத்திருக்கிறதோ?

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.