அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்ற நிலையிலும், அறுதிபெரும்பான்மை கிடைக்காமல் ஆட்சியமைக்க முடியாமல் ஆறுநாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்முயற்சியில் அதன் கூட்டணி கட்சிகளான சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவை வழங்கி த.வெ.க. தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சியமைக்க வாய்ப்பை வழங்கியிருக்கிறது, திமுக.

இந்நிலையில், மே-10 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், வந்தே மாதரம் பாடலும் அதனை தொடர்ந்து தேசிய கீதமும் மூன்றாமிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் தள்ளப்பட்டது தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு மட்டுமின்றி, முதல்வராக பதவியேற்றுக்கொண்டபிறாகான தனது உரையில், ஜோசப் விஜய் தமிழகத்தின் கஜானாவை வழித்தெடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள், சுமக்க முடியாத அளவுக்கு சுமையை தலையில் கட்டிவிட்டு சென்றுவிட்டார்கள் என்றும் முதலில் நிதிநிலைமை குறித்து வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டுத்தான் என் பணியை தொடர்வேன் என்பதாக பேசியதும் சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

vijayமுதலில் திமுகவின் சமூக  நலத்திட்டங்களை இலவசம் என்று கொச்சைப்படுத்திய த.வெ.க. விஜய், வாக்குப்பதிவு சமயத்தில் கடைசி நேர தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை அள்ளி வீசியிருந்தார். அதில், மகளிருக்கு மாதந்தோறும் 2500, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் என்பதாக முன்னர் பேசியதுக்கு முரணாக அறிவித்ததோடு வருடத்திற்கு ஆறு சிலிண்டர், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் என்றெல்லாம் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அப்போதே, அது விமர்சிக்கப்பட்டது. தமிழகத்தின் பட்ஜெட்டைவிட பலமடங்கு செலவுபிடிக்கும் விவகாரங்கள் இவை என்று பலரால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பின்னணியில்தான், இப்போது முந்தைய திமுக அரசை குறை சொல்லும்  நோக்கிலும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்கும் நோக்கிலும் பேசியிருக்கிறார், முதல்வர் ஜோசப் விஜய்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும்  ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ – என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!

“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.” என்பதாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

மாற்றம் … மாற்றத்துக்கான அரசியல் என்று ஆட்சியை பிடித்தவர். முதல்நாளே, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாமிடத்துக்கு தள்ளி பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டார். தற்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்தும் “மாற்றத்தை” நோக்கி பயணிக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது, முதல்வர் ஜோசப் விஜயின் கன்னிப்பேச்சு!

–             அங்குசம் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.