ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுமா? அதிர்ச்சி பின்னணி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

முதல்வர் விஜய் அலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இல்லங்களையும் எட்டிவிட்டதா?  தவெகவுக்கு முதன்முறையாக வாக்களித்த ஐஏஎஸ் அதிகாரிகள். சென்னையின் விருகம்பாக்கம் பகுதியில், ‘Taisha’ (தைஷா) என்ற குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இங்கு பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் சாதாரண மக்கள் பெருமளவில் விஜய்க்கு வாக்களித்ததாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், நிர்வாக அமைப்பிற்குள்ளேயே பல ஆண்டுகள் பணியாற்றிய அரசு அதிகாரிகள்கூட, ‘TVK’ (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கு கணிசமான அளவில் வாக்களித்திருப்பது தனித்துத் தெரிகிறது.

குறிப்பாக, வாக்குச்சாவடி எண் 166-இல் பதிவான வாக்கு விவரங்கள் பின்வருமாறு:

இந்த வார அங்குசம் வார இதழில்…

DMK – 361

TVK – 325

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

AIADMK – 243

NTK – 55

திரையுலகப் புகழின் காரணமாகவே சாதாரண மக்கள் விஜய்க்கு வாக்களித்தனர் என்று பலர் வாதிட்டு வரும் இத்தருணத்தில், அரசு நிர்வாகத்தை மிக நெருக்கமாக அறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட, உயர்கல்வி பெற்ற வாக்காளர்களும் விஜய்க்கு ஆதரவு அளித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில், இதே வாக்குச்சாவடியில் திமுக 500க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

—  சுப்பையா – ஊடகவியலாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.