அல்லுசில்லு வாயில வந்திரும் அன்பர்கள்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்படவிருப்பதாக செய்தி வருகிறது. அது உண்மையானால், எதிர்க்கட்சிகளும் தோற்றாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு திரைப்படக்கலைஞரை தமது வேட்பாளராக நிறுத்த வேண்டும்.

தவெக ஏற்படுத்தியிருக்கும் அறிவுச்சீரழிவை, செவிட்டில் அறையும் படி தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் இது மாதிரியான பகடியே தீர்வு.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இங்கு நடப்பது ஒரு அபத்த நாடகம். இதை மேலும் அபத்தத்தைக் கொண்டே எதிர்கொள்ள வேண்டும்.

தவெக : ராகவா லாரன்ஸ்
திமுக : வடிவேலு
அதிமுக : விந்தியா
நாதக : சீமான்
சுயேட்சை வேட்பாளர்கள் : யோகி பாபு, சூரி, முனீஷ்காந்த்

திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவு நடக்கலாம். இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்கலாம்.

ஜனநாயகத்தை பின் நவீனத்துவ பாணியில் கட்டுடைப்பு செய்யலாம்.

ராஜன் குறை, தர்மராஜ் ஆகியோர் கட்டுரை எழுதி இடியாப்பங்களை சுட்டுப் பொசுக்குவார்கள்.

ராகவா லாரன்ஸுக்கு ராகுல் காந்தி, திருமா, சண்முகம், செல்வப்பெருந்தகை போன்றோர் பரப்புரை செய்வார்கள்.

லாரன்ஸ் மேடைகளில் சுழன்று சுழன்று ஆடுவார். இளைஞர்கள் மரத்துக்கு மரம் தாவி தமது வேட்கையைத் தணித்துக்கொள்வார்கள்.

வடிவேலுவுக்கு பிரமேலதா பரப்புரை செய்து தமது வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விந்தியா, திமுகவைப் புரட்டி எடுப்பார். விஜய்யை எனக்குப் பிடிக்கும் என்று தமது கட்சிக்காரர்களைக் குழப்புவார்.

பெண்கள் விஜய்யைப் பார்த்து புரண்டு புரண்டு அழுவார்கள்.

சீமான் நான் தாண்டா ஒரிஜினல் கவர்ச்சி என்று சட்டையைக் கழற்றி ஜிம் பாடியை முறுக்கிக் காட்டுவார்.

தம்மை வெறும் திரைக்கவர்ச்சி என்று விமர்சித்தவர்கள் எல்லோரும் இப்படி கவர்ச்சிப் புயலையே இறக்கிவிட்டார்களே என்று தற்குறி நாயகன் தடுமாறுவார்.

காவிரித்தாய் பொறுக்கமுடியாமல் குடகுமலைக்கே திரும்பிவிடுவாள். மேகே தாது அணைவை எந்தப்பக்கம் பார்த்து கட்டுவது என்று சிவக்குமார் குழம்பிப்போவார்.

தேர்தல் கமிஷனின் சார்பாக வோட்டுப் போட்டால் பாட்டுப்பாடும் ஈவிஎம் எந்திரங்களை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்வார்கள்.

சமஸ் எழுதப்போகும் கட்டுரையை நினைத்து அ ராமசாமி ஒரு கட்டுரை எழுதுவார். அது சமசுக்கே புரிந்துவிடும்.

நினைச்சாலே வயித்தக்கலக்குது!

இப்படிக்கு
அல்லுசில்லு வாயில வந்திரும் அன்பர்கள்

—     அமுதன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.