அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

’மாற்றம்’  செம ‘நாற்றம்’ -‘சென்ட்’ அடிக்கும் சினிமா சூனாபாணாக்கள்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழ்நாடு தேர்தல் களத்தில் சாதி பார்த்து, மதம் பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் மரபை தகர்த்தெறிந்த ”மாவீரனே’….. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழித்த ’மெகா புரட்சியாளனே’…. என்றெல்லாம் தவெக தலைவர் விஜய்க்கு வில்லுப்பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். சினிமாப் புரட்சியாளரான டைரக்டர் பா.இரஞ்சித்தும் இன்னும் சில மேதாவிகளும் இந்த அரிய வகை அரசியல் தலைவரை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பீட்டர் அல்போன்ஸ் போன்ற நாகரீக அரசியல் அனுபவஸ்தர்களே இந்த மாதிரியான டூப்ளிகேட் வாதங்களை ஒத்துக் கொண்டு விஜய்க்கு ஒத்து ஊதினார்கள். இதையெல்லாம் இப்போதும் கர்மசிரத்தையாக ஊதிக் கொண்டிருக்கிறார்கள் பலவட்டரை மீடியாக்கள்.

ஆனால் எல்லாமே ஃபேக், மேக்கப் என்பது ஒவ்வொன்றாக ரிலீசாகி விஜய்யின் யோக்கிய பிம்பத்தை அடித்து நொறுக்கி தூள்தூளாக்கிக் கொண்டிருக்கின்றன. எந்த தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையாக இருக்கிறது என்பதைப் பார்த்து யார் யாரையெல்லாம் நிறுத்தினார் விஜய் என்பது வீதிக்கு வந்து சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

Latest Tamil Newsஅதே போல் ஓட்டுக்குப் பணம் கொடுத்த கேடுகெட்ட செயலை, சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில்  நின்று தோற்றுப் போன அதியமான் என்பவர் ஒத்துக் கொண்டது கேவலத்திலும் கேவலம். அதியமான் நாறடித்த மாற்றம் என்னன்னா… சேலம் மேற்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற தவெக லட்சுமணன் என்னும் யோக்கியர் ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்தார் என்பது தான்.

இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது. கட்சி ரீதியாக அப்படிப்பட்ட ஃபேக்குகள் அடித்து நொறுக்கப்படுகிறதென்றால் ஆட்சி நிர்வாக ரீதியாகவும் தினந்தோறும் ஒரு கூத்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில்  இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயர் வைத்த பெருங்கூத்தும் நடந்திருக்கு. அமைச்சரவைக் கூட்டத்திற்கு பெயர் வைத்த கூத்தை இதுவரை தமிழர்கள் கண்டதுண்டா? பார்த்ததுண்டா? இதுல இன்னொரு கொடுமைக் கூத்து என்னன்னா முக்கால் மணி நேரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 465 திட்டங்களுக்கு ஓகே பண்ணிருக்காராம் ‘மாற்றம் ஹீரோ’ முதல்வர் ஜோசப் விஜய்.

முதல்வர் விஜய்க்கு நம்பர் பிளேட்டை பரிசாக கொடுத்த வெங்கட் பிரபு: நிஜத்தில்  அது பைக் நம்பர் பிளேட்ங்கணா - goat director venkat prabhu gifts tn07cm2026  number plate ...இப்படி மாற்றங்களெல்லாம் செம நாற்றமடிக்க ஆரம்பித்துவிட்டதால், தன்னுடைய சினிமாத்துறையில் இருந்து தினசரி ஒருவரையோ அல்லது இருவரையோ வீட்டுக்கு வரவைத்து போட்டோ எடுத்து ரிலீஸ் பண்ணி, அந்த சினிமா சூனாபாணாக்களை வைத்தே தன் புகழ் பாட வைத்துக் கொண்டிருக்கிறார் ‘மாற்றம் ஹீரோ’ ஜோசப் விஜய்.

HARINI JEWELLERS TRICHY

பத்து நாட்களுக்கு முன்பு டைரக்டர் வெங்கட் பிரபு, ஜோசப் விஜய்யைச் சந்தித்தார். “அவரு இப்பவும் அதே சிம்ப்ளிசிட்டியா இருக்கார். அன்பா பேசினார். பூஸ்ட் சாப்பிடுறீகளா? ஹார்லிக்ஸ் சாப்பிடுறீகளா?ன்னு பாசமா கேட்டார்” அப்படிங்கிற ‘பிட்’டை எக்ஸ் தளத்தில் போட்டார் வெங்கட் பிரபு.

நான்கு  நாட்களுக்கு ‘கருப்பு’ டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜி போனார், போட்டோ எடுத்தார். ‘மாற்றம் ஹீரோ’வுக்கு புகழ்ச்சி பாடினார். எம்.எஸ்.பாஸ்கர் என்ற நடிகர் போனார், போட்டோ எடுத்தார், புகழ்மாலை சூட்டினார்.

இப்ப லேட்டஸ்டா… அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு ’புதுமைப்பித்தன்’ ராதாகிருஷ்ணன் பார்த்திபன் போனார், போட்டோ எடுத்தார், திரும்பி வந்தார். “கருத்துக்கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்தவர், அதிர் Win’ நாயகன், AM முதல் PM வரை பொறுப்பாக இருக்கும் CM, இப்படி ஒரு சிஎம்மை நான் பார்த்ததேயில்லை” இப்படியெல்லாம் கைக்கு வந்ததையெல்லாம் கவிதையாக எழுதிய ‘கிறுக்கன்’ [ அட பித்தனைத் தாங்க அவர் பாணியில சொல்றோம்] பார்த்திபன், அதன் பிறகு எழுதியிருப்பது அவலமா? கேவலமா? இல்ல கேவலப்படுத்தியதான்னு நமக்குத் தெரியல.

‘விஜயநகரப் பேரரசாக அரியணையை அலங்கரித்திருக்கும் முதல்வரிடம் , “சார்ர்ர்…உங்க தோளில் கைபோட்டுக்கலாமான்னு கேட்டேன். நான் தான் சார் உங்ககிட்ட கேட்கணும்னு சொல்லிக்கிட்டே என் தோளில் கைபோட்டார். அவரிடம் டாஸ்மாக்கை குளோஸ் பண்ணிட்டா ஏகப்பட்ட ஏழைகளின் வாழ்வு குளோஸ் ஆகாது என்ற மனுவைக் கொடுத்து சில பாடல்களையும் பாடிக்காட்டினேன்”. இப்படியெல்லாம் ‘பித்துக்குளி’த்தனமாக உளறிக் கொட்டியிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

நாற்றமெடுக்க ஆரம்பித்திருக்கும் கட்சிக்கும் ஆட்சி நிர்வாகத்திற்கும் சினிமா சூனாபாணாக்கள் மூலம் தினந்தோறும் ‘சென்ட்’ அடித்துக் கொண்டிருக்கிறார் ‘மாற்றம் ஹீரோ’.

எல்லாம் சரி ‘புதுப்பித்தரே’ மன்னர் பரம்பரை, மன்னர் மனநிலைன்னு திமுகவை திட்டிக்கிட்டே இருக்கும் உங்க பரமபிதாவை விஜயநகரப் பேரரசர் மாதிரின்னு சொல்லிட்டீகளே. அப்படின்னா அவரை கேவலப்படுத்துவதாகத் தானே அர்த்தம்?

  —   கரிகாலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.