அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஒரு மயக்க நிலையில் மக்களின் மனங்கள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அரசு, அரசியல் குறித்து குழந்தைகள், பெண்களுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டிகளைத் தாங்கள் கவனித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சமூக ஊடகங்கள் என்ற பெயரில் இயங்கும் பொறுப்பற்ற தளங்களில் இவை வேகமாக பகிரப்படுகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

தந்தி டிவி யில் ஒரு பெண், “இதையெல்லாம் போட்டுடாதீங்க” என்று கூறிவிட்டு பேசுகிறார். ஆனால், ஊடகம் அதை அப் பெண்னின் முகம் தெரியும் வகையில் ஒளிபரப்பி உள்ளது‌.

ஊடக அறம் என்றால் என்ன? என்ற மிகப் பெரும் கேள்வியை இந்த செயல்பாடு எழுப்புகிறது.

யாவரும் கேளீர்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து எனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் என்ற பெயரில் உலா வரும் சில பதிவுகள் எனது கணிப்பை உறுதி செய்கிறது.

ஊதாரித் தன்மையுடன் (Lumpen character) கும்பல் மனப்பான்மைக் கொண்ட (Mass attitude) ஒரு கூட்டம் உருவாகி உள்ளது.

21ம் நூற்றாண்டின் lumpenகளில் படித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், பெரும் பொறுப்பில் இருப்பவர்களும் உள்ளடங்குவர்.

இது மிகப் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது.

இதில் சிக்கி உள்ளவர்களில் ஆண், பெண் குழந்தைகள்,  பாலின பேதம் இல்லாமல்  இளைஞர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரும்.

எத்தகையச் சமூகச் சீரழிவை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் எதிர்பார்த்ததோ அத்தகையச் சீரழிவு உருவாகி உள்ளது.

தனக்கு தனித்த பண்பாடு உண்டு, தனது பண்பாடு மற்ற அனைவரின் பண்பாட்டை விட உயர்ந்தது என்ற பெருமிதத்துடன் சீனா இருந்ததை ஏற்க முடியாத ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள், opium போதை மருந்தை சீனாவிற்குள் கடத்தி, சமூகத்தை சீர்கெடுக்க முயன்றதை 19ம் நூற்றாண்டின் வரலாற்றில் இருந்து அறிகிறோம்.

அதே போன்ற பண்பாட்டு சீரழிவு தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.

பெரியார் மண் என்ற பெருமையை அழித்திட, எந்த வர்க்கத்தின் மேம்பாட்டிற்கு சுயமரியாதை இயக்கம் பாடுபட்டடதோ, அதே வர்க்கத்தைக் கொண்டு,  படித்து, பட்டம் பெற்று, கண்ணியத்துடன் வாழ்வதற்கு பதிலாக, தன்னை இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தியவன்  விரும்பியவாறு நடந்துக் கொள்ளச் செய்து, பகுத்தறிவு கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது.

மக்களாட்சியில் நாயக வழிபாடு (Hero worship) கூடாது என்ற அண்ணல் அம்பேத்கர் இன்று அன்னியர் ஆகிவிட்டார்‌.

வள்ளலார் முதல் பெரியார் வரை, அயோத்திதாசர் முதல் அண்ணல் அம்பேத்கர் வரை, சிந்தனைச் சிற்பி தோழர் ம. சிங்காரவேலர் முதல் தோழர் என். சங்கரய்யா, தோழர் ஆர். நல்லக்கண்ணு வரை பொதுமைச் சமூகமாக வளர்த்தெடுக்க முற்பட்ட தமிழ்ச் சமூகம் இன்று நுகர்வுச் சமூகமாக, விலங்கு மனநிலையில் திரிகிறது.

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

ஒரு மயக்க நிலையில் மக்களின் மனங்கள்.

இது‌ இயலாமை, ஆற்றாமை அல்லது ஏமாற்றத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் புரிந்துக் கொள்ள இயலவில்லை.

அவர் இருந்தால் போதும், எதுவும் நடக்காவிட்டாலும் பரவாயில்லை என்று கூறப்படுவது மிகப் பெரும் ஆபத்து.

அடுத்தக் கட்டமாக அவருக்காக எதையும் செய்ய தயங்கப் போவதில்லை.

எனது நாயகனுடன் நீ இருக்க வேண்டும். எனது நாயகனை எதிர்ப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள். ஏன், எதற்கு போன்ற கேள்விகளுக்கே இடமில்லை.

The society is heading towards a chaotic situation. Meaningless desire and rage against all who oppose their hero.

இன்றையச் சூழல், 2001ல் அன்றைய அமெரிக்க அதிபரின் infamous statementஐ நினைவுப் படுத்துகிறது. “Either you are with us, or you are with the terrorists”.

இந்த போக்கைத் தடுக்க உடனடியாக உரிய வழிமுறைகளை ஆராய வேண்டும்.

குழந்தைகள், இளைஞர்களுடன் உரையாடல் நிகழ்த்த வேண்டும்.

அவர்களை உரையாடலில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

அவர்களை பக்குவப்படுத்த, அவர்களை எவ்வாறு நெருங்க இயலுமோ அவ்வாறு நெருங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நமது அமைதியின் மூலம், ஊதாரித்தனம் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுத் தன்மையாக உருவெடுத்துவிடக் கூடாது.

இது தேர்தல் கால அரசியல் அல்ல. ஒரு அரசியல் கட்சி குறித்த விமர்சனமும் அல்ல. சமூக உளவியல் சம்மந்தப்பட்ட சிக்கல்‌.

அரசியல் கட்சிகளின் கூட்டணியோ, தேர்தல் வெற்றி, தோல்வியோ இதை சரி செய்ய முடியாது.

அரசியல் கட்சிகள், சமூக மாற்றத்திற்காக பாடுபடும் அமைப்புகள் ஆழ்ந்து சிந்தித்து உரையாடலுக்கான வழி முறைகளை ஆராய வேண்டும்.‌

மிகுந்த கவலையுடன் எனது கருத்தை முன்வைக்கிறேன்.

—  பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.