மகிளா நீதிமன்றம் அதிரடி! 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம், அருவாக்குடி கோவில் தெருவை சேர்ந்த செல்லையன் மனைவி முத்துக்கண்ணு 55/22 என்பவருக்கு தெரிந்த சுமார் 28 வயது பெண் ஒருவர் ஆடு மேய்க்க சென்ற போது அந்த பெண்ணை, ஸ்ரீரங்கம் தாலுகா K.கள்ளிக்குடியை சேர்ந்த சங்கபிள்ளை 72/26, என்பவர் ஆசை வார்த்தை கூறி கெடுத்து கர்ப்பமாக்கியதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மேற்படி முத்துக்கண்ணு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 08/22 U/s 376(2) IPC பிரிவின் கீழ் கடந்த 12.03.2022-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு. மேற்படி வழக்கின் விசாரணையானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் (Mahila) நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில், நீதிபதி திருமதி.சண்முகபிரியா, அவர்கள் (18.08.2026) எதிரி சங்கபிள்ளை 72 /26, த.பெ மாசிலாமணி, அருவாகுடி, K. கள்ளிக்குடி, மணிகண்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவருக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும், கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கியும் தீர்ப்பளித்துள்ளார்.

மேற்படி வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த முன்னாள் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அணுபல்லவி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை திறம்பட கவனித்த நீதிமன்ற காவலர் நித்யா ஆகியோரை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப பாராட்டியுள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.