40 நாட்களில்  ‘தகப்பன்’ ஷூட்டிங் நிறைவு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் கே.குமார் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு  45 நாட்களில்  முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில்  40 நாட்களிலேயே வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசத்தை  மையமாக வைத்து உருவாகிறது ‘தகப்பன்’.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இது குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், “திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு ஹீரோ ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம். அதேபோல்  கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததது..

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் அருகே மேலவளவு  கருப்பு கோயிலில் துவக்க விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

சிறப்பம்சமாக, படப்பிடிப்பு தொடங்கிய அதே  மேலவளவு கருப்பு  கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றது. . படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்து , கருப்பு கோவிலில் கிடா வெட்டி ஊர் மக்களுக்கு விருந்து வைத்து மகிழ்ச்சிப்படுத்தினார் தயாரிப்பாளர் குமார் ” என்கிறார்.

வரும் டிசம்பரில் வருகிறார் ‘தகப்பன்’.

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.