குப்பை மேடுகள் இனி ‘செல்பி’ பாயிண்டுகள்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதில் இருந்து மீட்கப்பட்டு 70 இடங்களில் அழகிய வடிவங்களுடன் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு ‘செல்பி’ பாயிண்டுகளாக அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டு பகுதிகளில் தினமும் சுமார் 450 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. துப்புரவு பணியாளர்கள் ஒவ்வொரு வார்டிலும் வீடுகள் தோறும் சேகரமாகும் குப்பைகளை 4 வகைகளாக பெற்று நுண் உரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் சாலையோரங்களிலும், பல் வேறு இடங்களிலும் குப்பை கொட்டுவது பெருமளவுதடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து குப்பைகளை கொட்டும் பகுதிகளாக இருந்த 124 இடங்களை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இடங்களை குப்பைகள் கொட்டுவதில் இருந்து மீட்கப்பட்ட வென்னீஸ் தெரு, மேலப்புதூர், வெள்ள வெற்றிலைக்கார தெரு, பெரியமிளகுபாறை , டி வி எஸ் டோல்கேட், மதுரை ரோடு வள்ளுவர் நகர்,பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, அண்ணா நகர்,கீழப்புதூர்,மேல சிந்தாமணி சிதம்பரம் மஹால் அருகில், கீழ படையாச்சி தெரு, பஞ்சவர்ணசாமி கோவில் தெரு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களை அழகிய வடிவங்களுடன் கூடிய செல்பி பாயிண் டுகளாக மாற்றி உள்ளனர்.
மேலும், அங்கு விழிப்புணர்வு ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த இடம் அதில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், வணிகர்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் குப்பைகள் கொட்ட வேண்டாம் எனவும் பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் .





Comments are closed, but trackbacks and pingbacks are open.