அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை! மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்தும் கோரிக்கை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

உற்றான் உடையான் மருந்துஉழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து. (குறள்: 950)

இந்த வார அங்குசம் வார இதழில்…

பொருள்: நோயுற்றவன் (நோயாளி), நோயைத் தீர்க்கும் மருத்துவர், அதற்குரிய மருந்து, மருந்தைக் கொடுத்து நோயாளிக்குத் துணையாக இருந்து பாதுகாப்பவர் ஆகிய நான்கு வகைப் பாகுபாடுகளுடன் அமைவதே முழுமையான மருத்துவ முறையாகும். இதன் மூலம் ஏழை நோயாளிகளுக்கு முறையான துணையும், பாதுகாப்பும் தேவை என்பதை திருக்குறள் கூறுகிறது. மேற்கண்ட திருக்குறள் கூற்றுக்கு ஏற்ப தமிழக அரசு திருச்சி மாவட்ட மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை நோயாளிகளை பாதுகாப்பது என செய்யாமல் மிகவும் அலட்சியமாக பல்வேறு துன்பங்களில் மக்களை நடத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது குறிப்பாக கீழ்கண்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

  1. மருத்துவமனையில் மக்கள் செல்லக்கூடிய நான்கு மின் தூக்கிகளில் (LIFT) அதில் ஒன்று மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். மற்ற மூன்றில் இரண்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரண்டிலும் ஒன்று நோயாளிகளை கூட்டிச் செல்வதற்கும், பிறர் சாதனங்கள் பொருட்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்துகின்றனர். (உதாரணமாக உணவு வண்டி, பெரிய குப்பை டப்பா, படுக்கை மெத்தை மற்றும் பெட்ஷீட் பொருட்கள்) மேலும் ஒன்று பழுதாகி பல மாதங்களாக மக்கள் செல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. காலை நேரத்தில் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து நோயாளிகளை பார்க்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதை உடனடியாக அது சரி செய்யப்பட வேண்டும்.

2. இருதய சிகிச்சை மற்றும் மூளை நரம்பியல் சிகிச்சை புறநோயாளிகள் பகுதியில் 200 முதல் 300 நோயாளிகள் வரை வாரத்திற்கு மூன்று நாட்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அந்த நேரத்தில் அந்த இடத்தில் இரண்டு மின்விசிறிகள் தவிர வேறு எதுவும் இல்லை. மக்கள் வேர்வையினாலும் காற்றோட்ட சூழல் இல்லாமலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வயதானவர்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் என பல பேர் பாதிக்கப்படுகின்றனர். இதை கணக்கில் கொண்டு உடனடியாக வரக்கூடிய மக்களுக்கு தேவையான அளவுக்கு மின்விசிறிகளை உடனடியாக பொருத்த வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

  1. இருதய சிகிச்சை மற்றும் மூளை நரம்பியல் சிகிச்சை போன்ற புறநோயாளிகள் பிரிவு பகுதியில் வாரம் மூன்று நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நாட்கள் சிகிச்சை பெற முடியாமல் பெரும்பாலான மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் பல லட்சம் மக்கள் இருக்கும் சூழலில் அரசு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நாட்கள் சிகிச்சை செய்வதால் பிற நாட்களில் தனியார் மருத்துவத்திற்கு சென்று பல லட்சங்கள் செலவு செய்கின்ற நிலைமைகளுக்கு பொதுமக்கள் இன்னலுக்கும் துன்பத்திற்கும் தள்ளப்படுகின்றனர். ஆகவே வாரம் முழுவதும் 6 நாட்கள் புற நோயாளிகள் பிரிவு ஏற்படுத்தி பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதற்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் உள்நோயாளிகளாக பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கும். விவரங்களை சரி பார்ப்பதற்கும், நாட்கள் ஒதுக்குவதற்கும் மயக்கவியல் மருத்துவர் காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை தான் பணி செய்கிறார். இதனால் நோயாளிகள் பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை தாமதமாகிறது. இதை மாற்றி அமைத்து காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரை பணியில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
  2. தற்போது மாவட்ட மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்பது மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக கரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இருந்து செவிலியர்கள் சுழற்சி முறையிலும் 20 முதல் 30 பேர் வந்து இங்கே மருத்துவமனையில் பணியாற்றும் அவலநிலை தொடர்கிறது. இருக்கின்ற நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவமனையில் தேவையான எண்ணிக்கையில் புதிய செவிலியர்களை உடனடியாக பணிக்கு சேர்த்து நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.Trichy government hospital
  3. அவசர சிகிச்சை முதல் பல்வேறு சிகிச்சைகள் எடுத்து கொள்ள சில ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட ஆறு மாடி கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் நோயாளிகளுக்கு கழிவறைகள் உள்ளன. இதில் முறையாக அதற்கான தண்ணீர் குழாய்கள் பராமரிக்கப்படாமல் ஒவ்வொரு தளத்திலும் குழாய் தண்ணீர் 24 மணி நேரமும் வீணாக சாக்கடையில் செல்கிறது. மேலும் எலும்பு முறிவு பகுதியில் நோயாளிகளுக்கு ஏற்ப உள் கழிவறையில் சாதாரண இந்தியன் வகையிலான கழிவறை உள்ளதே தவிர வெஸ்டன் கழிவறை இல்லாமல் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் .சிறுநீர் மற்றும் மலக் கழிவுகள் அடைத்துக் கொண்டு மிகவும் துர்நாற்றமாக வீசுகின்றது. நோயாளிகளுக்கு நோய் தொற்றும் அவல நிலை ஏற்படுகிறது. இதை அதிகாரிகளிடம் புகார் செய்தால் இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை . அதேபோல பல்வேறு இடங்களில் மின்விசிறி ஓடாமலும் மின் விளக்குகள் பழுதாகியும் உள்ளதால் வெயில் காலங்களில் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அரை இருட்டில் அவதிபடுகின்றனர்.
  1. மருத்துவமனையில் குறிப்பிட்ட சில இடங்களை தவிர பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி இல்லாமல் நோயாளிகளுக்கு தாகம் ஏற்பட்டு குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் . குறிப்பாக ஸ்கேன் எடுக்கும் இடத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரி புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக தண்ணீர் வைப்பது துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு வேலையாக தரப்படுகிறது. அவர்கள் தூய்மை செய்வதும் பல்வேறு வேலைகள் செய்து பல்வேறு சிரமப்பட்டும் இறுதியாக காலை 11 மணிக்கு மேல் தான் குடிநீர் வைக்கின்ற வேலையை செய்கின்றனர். இதனால் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மருத்துவமனையிலும் இரவு வரை விடிய விடிய இருக்கக்கூடிய நோயாளிகளுக்கும் தண்ணீர் வசதி கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் இதற்கென்று தனியாக நபர்களை போட்டு மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து தளத்திலும் குழாய்கள் சரி செய்யப்பட்டு, துர்நாற்றம் வீசாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
  2. அரசு மருத்துவமனையில் ஆங்காங்கே உள்ள வார்டுகளுக்கு பொதுக்கழிப்பிடம் வசதிகள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் கதவு இல்லை, குழாயில் தண்ணீர் வருவதில்லை. மலக்கழிவு மற்றும் சிறுநீரக கழிவு போன்றவை தேங்கி நின்று மிகவும் துர்நாற்றம் அடிக்கிறது. கட்டிடங்களும் பழுதாகி உள்ளன. இவற்றையெல்லாம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என எங்களது அமைப்பு சார்பாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுப்பதிலும் மிகவும் காலம் தாழ்த்தி வருகின்றனர். மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்யாமல் மிகவும் அலட்சியம் காட்டி வருகின்றனர் என்பதை எங்களது கண்டனமாக தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை முதல்வர்கள் இந்த பிரச்சனைகளில் தீவிர கவனம் செலுத்தி மேற்கண்ட குறைகளை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.Trichy government hospital
  3. மருத்துவமனையில் மேற்கண்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக குறைபாட்டுடன் நீடிப்பதால் எமது அமைப்பின் ஆலோசனையாக 15 நாட்களுக்கு ஒரு முறை மக்கள் நலக்குழு என்ற வகையில் சமூக ஆர்வலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாவட்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு கமிட்டி ஏற்படுத்தி மருத்துவமனையில் உள்ள குறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கையாக மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் தெரிவிக்கும் வகையில் மக்கள் நல குழு ஒன்றை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆட்சி அமையும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை மிகமிக விரைவான முறையில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். அதில் திருச்சி மருத்துவமனைக்கு போதுமான நிதியை உடனே தந்து தரமான சிகிச்சை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அதை தவறும் பட்சத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் குறைகளை சரி செய்வதற்கான போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்பதை இதன் வாயிலாக தெரியபடுத்திக் கொள்கிறோம்.

தோழர். திருச்சி செழியன்

மாநில பொதுச் செயலாளர்

மக்கள் அதிகாரம் தமிழ்நாடு புதுவை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.