அண்ணன் சீர் திட்டம் வந்தாச்சு … நடைமுறை எப்போது ?
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் முறையில் சீர்வரிசை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் (Annan Seer Scheme) நலத்திட்டத்திற்கு அக்டோபர் 5 ந்தேதி அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில் இந்த திட்டத்தில் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை சீர் வரிசையாக வழங்கப்படும் என்றும்; இதற்காக இத்திட்டத்தின் முதற்கட்டச் செயலாக்கத்திற்காக தமிழக அரசு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதியில், மணப்பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 5 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 2.5 இலட்சம் என்பதாக மாற்றியிருக்கிறார்கள்.
இத்திட்டம் இந்த மாதம் அக்டோபர் 5 அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) மூலம் மட்டுமே பெறப்படும். இதற்கென பிரத்யேக இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்றும்; இத்திட்டம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் சமூக நலத்துறை மூலம் தனியாக வெளியிடப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், நிதி ஒதுக்கிய நிலையில் இதற்கு விண்ணப்பம் செய்வது எப்படி என அரசு தரப்பில் இதுவரை தெரிவிக்க வில்லை. இதனால் திருமணமாக இருக்கின்ற மணப்பெண்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளார்கள்.
S.செந்தில்குமார்






Comments are closed, but trackbacks and pingbacks are open.