தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சிறைக்காவலர்கள் !

ஜெயில் பரிதாபங்கள் – 16

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தேனி மாவட்ட சிறையில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்துக்கு, அப்போது பணியிலிருந்த காவலர்களின் கவனக்குறைவுதான் காரணமா? இதற்காக அவர்களை கூண்டோடு இடமாற்றம் செய்தது தவறான முன்னுதாரணம் என்பதாக குற்றஞ்சாட்டுகிறார், ஓய்வுபெற்ற சிறைக்காவலர் கருணாமூர்த்தி.

“பணியில் இருந்த காவலர்களை கூட்டு சதிதிட்டத்தால் கவனத்தை திசைதிருப்பி  காவலர்களைதாக்கி தப்பித்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.  தமிழ்நாடு சிறை விதிகள் 2024 அத்தியாயம் 32 விதி எண் 638(1)(2) இன்படி  நிகழ்ந்த அவுட் பிரேக்கிங் மூலம் நடந்த தப்பித்தலாகும்.  இதற்கு கண்ணியத்தோடும், சேவை மனப்பான்மையோடும், கவனமாகவும் கடமை புரிந்த காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது தவறான முன்னுதாரமாகும்.  ஒரு மாவட்ட சிறையின் கண்காணிப்பாளராக கூடுதல்கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால், சிறை அந்தஸ்தில் ஒரு அலுவலரையாவது நியமித்திருக்க வேண்டும். ஆனால், துணை சிறை அலுவலரை கண்கிணிப்பாளர் பொறுப்பில் நியமித்துவிட்டு மத்திய சிறைகளில் கூடுதல் கண்காணிப்பாளர்  பணியிடம் காலியாக உள்ளது என்று இரண்டு சிறை அலுவலர்களை நியமித்தது யார் தவறு? இது நிர்வாகத் தவறு? இதில் முகமைப்பணி யாற்றும் தலைமை இயக்குனரை தண்டிப்பது நியாயமற்ற செயல்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

காவலர்களை தாக்கி தப்பித்தல் சம்பவம்நடந்துள்ளது. ஓரு வேளை உயிர் சேதமாகியிருந்தால் மெமோ கொடுக்க முடியுமா?  அந்த காவலர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு செய்ய துறை முன்வருமா?  1999 இல்  சிறைக்கலவரம் நடந்து சிறை துணைசிறை அலுவலர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு இன்றும் நடந்துவருகிறது. இருவர் உயிரிழந்த போதும் இழப்பீடு இல்லை.  இந்த இலட்சணத்தில்தான் சிறைத்துறை இயங்குகிறது. சம்பவத்தில், காயமடைந்த காவலர்களை  மருத்துவமனையில் சென்று பார்க்க யாரும் செல்லவில்லை. மாறாக, பணியிடைநீக்கம் துரிதமாக நடந்தேறிவிட்டது. கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் 7 ஐ அரசுக்கு சரண்டர் செய்தது யார்?

இருந்தாலும் பரவாயில்லை. சிறை அலுவலர் தகுதியிலாவது ஓருவரை நியமிக்காதது யார் தவறு?   மூன்று உதவி சிறை அலுவலர்கள் பணியில் இருந்தும் இரவு அதிகாரியை நியமிக்காதது யார் தவறு?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழ்நாடு சிறை விதிகள் 2024 விதி எண் 56 இன்படி  உதவி சிறை அலுவலரே புதிய வரவு சிறைவாசிகளை அனுமதி எடுக்க வேண்டும்.  சிறை விதிக்கு மாறாக, அந்த இடத்தில்முதல் தலைமைக் காவலரை பணியமர்த்தி இரவு அதிகாரியாக நியமித்தது யார்? இதையெல்லாம் விட்டுவிட்டு துறை தலைமை இயக்குனரை மாற்றினால்  இது கேலிகூத்துதானே?” என்பதாக கேள்வி எழுப்புகிறார்  கருணாமூர்த்தி.

இவ்வளவுக்குப் பிறகும்கூட, இந்த விவகாரத்தின் மையமான சிக்கலை உணர்ந்து கொள்ளாமல்,  மத்தியசிறையில் பணிபுரியும் காவலர்களை பணி நேரத்தை மாற்றியமைத்தும்; பெண்கள் தனிச்சிறைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் அரசு நிர்ணயித்த பணி திட்டத்தை மாற்றி மிகக்கடுமையான பணிநேரத்தை செயல்படுத்த வாய்மொழியாணை பிறப்பிக்கபட்டிருப்பதும், சிறைக்காவலர்களை மேலும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள், சிறைக்காவலர்கள் தரப்பில்.

சிறைக்காவலர்களின் பணிநேர முரண்பாடுகள் குறித்து அடுத்த பதிவில் விவாதிப்போம்.

(தொடரும்)

அங்குசம் புலனாய்வுக்குழு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.