பெண் உரிமையும் சுய மரியாதையும் !

சிறார் இலக்கியம் – 20

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சங்க இலக்கியப் பாடல்களில் பெண்கள் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்களாகவும், தங்கள் கருத்துக்களைத் தைரியமாகப் பேசும் திறன் கொண்டவர்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களுக்கான கதைகளில், ஒரு சிறுமி தன் தோழியருடன் சேர்ந்து தனக்குச் சரியெனப்பட்ட ஒரு நல்ல காரியத்தைத் தைரியமாக முன்னெடுத்துச் செய்வது போலவும், பெரியவர்கள் அதற்குக் மதிப்பளிப்பது போலவும் கதைக்களத்தை அமைக்கலாம். இது சிறுமிகளுக்குத் தன்னம்பிக்கையையும், சிறுவர்களுக்கு சக மனிதர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொடுக்கும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மேலும், புறநானூற்றில் ஒரு தாய் தன் மகன் போர்க்களத்தில் முதுகு காட்டி ஓடிவந்தால் அவனது மார்பை அறுத்து எறிவேன் என்று சபதம் எடுக்கும் வீரம் செறிந்த சூழல் உண்டு (மூதின் முல்லை).

கார்த்திகா கவின்குமார்
கார்த்திகா கவின்குமார்

இதை நேரடியாகப் பயமுறுத்தும் வகையில் சொல்லாமல்,  “தன் நாட்டின் மீதும்,  தன் மக்கள் மீதும் ஒரு பெண் காட்டிய அதீத வீரமும் காவலும்” என்ற கோணத்தில், தன் தேசத்தைக் காக்கத் துணிந்து நிற்கும் ஒரு வீரத் தாயின் கதையாகச் சிறுவர்களுக்குப் புரியும்படி சுவாரசியமாகச் சொல்லலாம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், ஒரு காட்டில் உள்ள மரங்களை வெட்ட வரும் வெளியாட்களை எதிர்த்து ஒரு சிறுவனும் சிறுமியும் சமமாக நின்று போராடுகிறார்கள். சிறுவன் மரங்களைப் பாதுகாக்கத் திட்டமிடுகிறான், சிறுமி தனது அறிவுக்கூர்மையால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி விலங்குகளையும் மரங்களையும் காப்பாற்றுகிறாள். இங்கு ஆண்-பெண் என்ற பேதமின்றி இருவரும் ஹீரோக்களாக வலம் வருவார்கள்.

சங்க காலச் சொற்களைப் அப்படியே திணிக்காமல், தற்காலக் குழந்தைகளுக்குப் புரியும் எளிய தமிழ்ப் பதங்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக தினைப்புனம் காத்தல் என்பதை திணை பயிர் விலையும் நிலத்தில் விளைந்த தினைக்கதிர்களை உண்ணவரும் கிளிகள், பறவைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து (யானை போன்றவையிலிருந்து) காவல்காப்பது தினைப்புனம் காத்தல் என்பதைப் போன்று நவீன சொல்லாடல்களுக்கு ஏற்றவாறு எழுத வேண்டும்.

சங்க இலக்கியப் பாலின சமத்துவக் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லும்போது,  “ஆண்-பெண் இருவரும் சமம்” என்பதைப் பிரச்சாரம் செய்வதைப் போலன்றி, சங்க காலத்து மனிதர்கள் இயல்பாகவே அப்படித்தான் வாழ்ந்தார்கள் என்ற உண்மையை எளிய, சுவாரசியமான கற்பனைக் கதைகளாகக் கொண்டு செல்ல வேண்டும்.

தொடரும்

— கார்த்திகா கவின்குமார், எழுத்தாளா், கதைசொல்லி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.